உலக அழகி பிரியங்கா சோப்ராவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இவர் இந்திய திரைப்பட நடிகையும் ஆவார். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் மாடலாக பணியாற்றினார். இதனைத்தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவே இல்லை. மேலும்,அவர் பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதோடு நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து உள்ளார்.
இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். பின் அமெரிக்க நடிகர் மற்றும் பாப் பாடகர் நிக் ஜோனஸை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய மாதம் ஜோத்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. பின் இவர் அமெரிக்காவிலேயே குடியேறினார்.இவர் சொகுசான ஆடம்பர வாழ்க்கை புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு ரசிகர்களால் கவனிக்கப்படுகிறது.
சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் 20 ஆயிரம் சதுர அடி வீட்டை தன் கணவருடன் சேர்ந்து ரூ.144 கோடிக்கு வாங்கினார்.இந்த வீட்டில் 7 படுக்கை அறைகள், 11 குளியல் அறைகள், நீச்சல் குளம், சினிமா தியேட்டர், பார், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு அரங்கம் உள்ளன. பின் இவர் புதிதாக ரூ.3 கோடிக்கு சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
இப்படி ஹாலிவுட்டில் சொகுசு வாழ்கை வாழ்ந்து வரும் பிரியங்கா சோப்ராவிற்கு விரைவில் நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருதை அறிவிக்கும் கௌரவம் கிடைத்துள்ளது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் பிரியங்கா சோப்ரா ஆஸ்கார் விருதை வழங்க என்ன தகுதி இருக்கிறது என்று ஹாலிவுட் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். இதற்க்கு பதிலடி கொடுத்த பிரியங்கா சோப்ரா, தன்னுடைய 60 படங்களின் லிஸ்டை அனுப்பியுள்ளார்.