பிரபல டி.ஆர்.பி தொலைகாட்சியில் தொகுப்பளினி ஆகிவிட்டார் பிக்பாஸ் புகழ் ஜூலி

0
2071
bigg boss julie
- Advertisement -

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் சற்று தெரிந்த முகமானாலும், விஜய் டீவி நடத்திய தமிழ் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் மிகப் பிரபலம் அடைந்தவர் ஜூலி என்கிற ஜூலியானா.
bigg boss julieஅடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டினுல் சர்ச்சைகளில் சிக்கியே பிரபலம் அடைந்தவர் ஜூலி என்று கூட சொல்லலாம். சில வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாலும், வெளியே வந்த பின் பேட்டிகள் பொது நிகழ்ச்சிகள் என பிசியானார் ஜூலி.

-விளம்பரம்-

இதையும் படிங்க: விஜய வச்சு படம் எடுத்தால் நஷ்டம் தான் – பிக் பாஸ் புகழ் ஆரத்தியின் நாகரீகமற்ற பேச்சு

- Advertisement -

அவர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நேரத்தைப் பொருத்து ₹ 20000 முதல் ₹ 50000 வரை சம்பளமாக பெற்றுள்ளார் ஜூலி. பிக் பாஸ் வீட்டினுல் இருக்கும் போதே நான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வீடியோ ஜாக்கியாக வேண்டும் என்பதே என் லட்சியம் எனக் கூறியதை நாம் அனைவரும் கேட்டோம்.
bigg boss julieபிக் பாஸ் வீட்டிற்குள் வரும்வரை செவிலியராக பணிபுரிந்தவர் ஜூலி. தற்போது கலைஞர் தொலைகாட்சியில் ஒரு ஷோவை தொகுத்து வழங்கும் ஆங்க்கராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பபடும். இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் வருகின்றனர்.

Advertisement