ஜூலியை அசிங்கப்படுத்திய குழந்தை..கதறி அழுத ஜூலி – குழந்தை என்ன கேட்டது தெரியுமா ?

0
11257
julie

ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி என தனது கிடைத்த பிரபலத்தை ஒரு வழியாக உபயோகித்து சிறிது பொருளாதார ரீதியாக தன்னை உயர்த்திக் கொண்ட ஜூலியை நாம் அனைவரும் அறிவோம்.
julie
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கிடைத்த அந்த நல்ல பெயரை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரால் தக்க வைக்க முடியவில்லை. இதன் காரணமாக முதலில் அவரை ஆதரித்தவர்கள் கூட ஜூலி என்றாலே கடுப்பாகும் அளவிற்கு செய்துவிட்டார் ஜூலி என்று தான் கூறவேண்டும்.

பின்னர், அதில் கிடைத்தை பிரபலத்தை பயன்படுத்தி கலைஞர் தொலைகாட்சியில் நடன இயக்குனர் ‘கலா மாஸ்டர்’ நடுவராக வரும் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மாறினார்.

இந்நிகழ்ச்சியின் முதல் நாள் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது, வழக்கம் போல் தன் ‘லொட லொட’ வாயை வைத்துவிட்டு சும்மா இருக்காமல் ,குழந்தைகளிடம் சென்று தன் கதையை பேசியுள்ளார். உடனடியாக சுதாரித்த குழந்தைகள், ‘உங்கள எங்களுக்கு பிடிக்காது, நீங்கள் அதிகமா பொய் சொல்லுவிங்கனு எங்க அம்மா சொல்லி இருக்காங்க’ ‘ஓவியாவைத் தான் எங்களுக்கு பிடிக்கும் எனக் கூறி ஜூலியை பங்கம் செய்துள்ளது குழந்தைகள்.
julie
உடனே, மன வருத்தத்தில் அழுது செட்டை விட்டு வெளியேறியுள்ளார் ஜூலி. பின்னர், நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் ஜூலியை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை வைத்து உப்பு தின்றால் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என்பதை தற்போது ஜூலி சிறிது சிறிதாக உணர ஆரம்பித்துள்ளார் என சமூகவலை தளங்களில் விமர்சித்து வருகின்றனர் வலைதல வாசிகள்.