என்னது ஜூலிக்கு விருதா ? கிண்டல் செய்த நெட்டிசன்கள்- என்ன விருது தெரியுமா !

0
2229
Julie

சென்ற ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று பின்னர் ரசிகர்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர் ஜூலி. என்னதான் பல எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் ஜூலிக்கு அதே அளவில் ஆதரவும் இருக்க தான் செய்கிறது .

Bigg boss julie

பிக் பாஸிற்கு பின்னர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் தொகுபாளினியாக வந்தார் ஜூலி.அதன் பின்னர் விளம்பரங்கள் பட வாய்ப்புகள் என படு பிஸி ஆகிவிட்டார்.விமல் நடித்த மன்னர் வகையரை படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்த ஜூலி தற்போது உத்தமி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

என்னதான் ஜூலிக்கு நிறைய எதிர்ப்பாளர்கள் இருந்தாலும் அதே அளவுக்கு ஜூலி வெறியர்களுக்கு இருக்க தான் செய்கின்றனர்.அதற்கு சான்றாக ஜூலிக்கு விருது ஒன்றை அளித்துள்ளனர்.தேசி அவார்ட்ஸ் 2017 என்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜூலிக்கு The Best Trending face of the year 2017, அதாவது 2017 ன் மிகவும் பிரபலமான முகம் என்ற விருதினை வழங்கி உள்ளது.

விருதினை பெற்றுக்கொண்ட ஜூலி அந்த புகைப்படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார் .தமக்கு இந்த விருதினை அளித்த தேசி அவார்ட்ஸ் 2017 க்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். அதனுடன் விழாவின் போது தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டவ்ர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதனை பார்த்த ஜூலி வெறியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீங்கள் இந்த விருதினை பெற்றது மிக்க மகிழ்ச்சி தருகிறது எனவும் மேலும் இது போன்று பல விருதுகளை பெற வேண்டும் என்றும் வாழ்த்துக்கள் தெரிவித்திருகின்றனர்.