ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமா இளைஞர்களின் மத்தியில் பேமஸ் ஆனவர், ஜூலி. அதன்பிறகு, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போராட்டத்திற்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலியின் உண்மை முகத்தை அறிந்து அவரை மீம்ஸ்களால் வறுத்தெடுத்தனர்.
ஆனால், இது எதற்கும் ரியாக்ஷன் காட்டாத ஜூலி ‘ஓடி விளையாடு பாப்பா’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகக் களமிறங்கினார். பின்னர், ‘மன்னர் வகையறா’ படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றினார். வகையறா’ தொடர்ந்து தமிழ் சினிமாவில் அம்மன் தாயி படத்தில் நடித்து வருகிறார்.
சமீப காலமாக இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என்று தனது அன்றாட நடவடிக்கைகளையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வந்த ஜூலி தற்போது ஷார்சாட் என்ற புதிய சமூக வலைத்தளத்திலும் தனது அட்ராசிட்டியை ஆரம்பித்துவிட்டார்.
தற்போது மாட்டுப்பொங்கல் திருநாளை உலகம் முழுவதும் உள்ள தமிழகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜுலி தனது கையில் ஜல்லிக்கட்டு டாட்டோ ஒன்றை அச்சிட்டுக்கொண்டு அதனை புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.
ஜால்லிக்கட்டு மூலம் பிரபலமடைந்த ஜூலி அதன் பின்னர் அது சம்மந்தமாக எதுவும் செய்யவில்லை. தற்போது சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகிறார்..இருப்பினும் மீண்டும் ஜல்லிக்கட்டு மூலம் பிரபலம் தேடுகிறார் ஜூலி என்று வலைதள வாசிகள் வறுத்தெடுத்து வருகின்றார்.