கடந்த சில தினங்களாகவே விஜய் பற்றி ஜூலி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில்
சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மாஸ் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியை ஆரம்பித்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
https://www.youtube.com/watch?v=8e-5H86iHAg
அதோடு விஜய் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் தன்னுடைய கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து விஜய் அவர்கள் உரையாடி இருந்தார். அதில் விஜய் அவர்கள் ஜல்லிக்கட்டு காளை பற்றி ஒரு குட்டி கதை சொல்லியிருந்தார். இதற்கு பிக் பாஸ் ஜூலி, உங்கள் கட்சியில் பாதி பேர் மைனர்கள். ஜல்லிக்கட்டு காளைக்கு புல்லு கட்டு காட்ட போயிட்டு உயிரிழப்புகள் அதிகரிச்சா என்ன செய்வீங்க? என்று கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை போட்டிருந்தார்.
விஜயை விமர்சித்த ஜூலி:
இது மிகப்பெரிய அளவில் அதிர்வலை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் ரசிகர்கள் பலரும் ஜூலியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் ஜூலியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகிறார்கள். பின் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதில் அவர், விஜய் அண்ணா உங்களுடைய பேச்சை பார்த்தேன். அதில் ஒன்றும் இல்லை. இருந்தாலும் என்னுடைய ஆதங்கத்தில் நான் வீடியோ வெளியிட்டிருந்தேன்.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்:
உங்களுடைய ரசிகர்கள் இன்னும் அவர்கள் அரசியல் வயப்படவில்லை ரசிகர்கள் தான். என்னை சமூக வலைத்தளங்களில் கடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மைனர் பசங்களிடம் இருப்பது முக்கால்வாசி போலி ஐடிகள் தான். அதை வைத்து தான் அவர்கள் என்னை மிரட்டி கொண்டிருக்கிறார்கள். அதற்காக நான் பயந்து அந்த வீடியோவை டெலிட் செய்ய மாட்டேன். என்னுடைய கருத்துக்களில் இருந்தும் பின்வாங்க மாட்டேன் என்று சொல்லியிருந்தார். இருந்தும் பலர் ஜூலியை திட்டியும் ட்ரோல் செய்தும் வருகிறார்கள்.
What is this VIJAY ANNA ? It’s very wrong VIJAY ANNA 😡 #vijay #tvk #julie #politics #jananayagan pic.twitter.com/kt9iVpeJvd
— Mariajuliana_official (@iMariaJuliana) March 1, 2026
ஜூலி லேட்டஸ்ட் வீடியோ:
இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஜூலி வெளியிட்டிருக்கும் வீடியோவில், உங்கள் கட்சியில் முக்கால்வாசி பேர் மைனர் ஆகத்தான் இருக்கிறார்கள். வயசில் மைனராக இருக்கிறார்கள் இல்லை மண்டையில் மைனராக இருக்கிறார்கள். it is very wrong anna. இந்த வல்கர் வாரியர்ஸ், சோசியல் மீடியாவில் கண்ட மேனிக்கு திட்டுகிறார்கள். நான் சொன்ன கருத்துக்கு ஆப்போசிட்டா உங்களுடைய கருத்தையும் வையுங்க. அதுதானே ஜனநாயகம். ஜனநாயகனுக்கு இதெல்லாம் சொல்லித் தர வேண்டியது நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.






