என்னுடைய உண்மையான முகத்தை பிக் பாஸ் காட்டவில்லை – ஜூலி பரபரப்பு பேச்சு

0
4205
bigg boss julie

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஜூலி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்ததும் ஆரம்பத்தில் பார்வையாளர்கள் இவரை ஆதரித்தாலும், ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இவரின் செயல்பாடுகள் பிடிக்காததால், மக்கள் அனைவரும் ஓவியா ஆதரவாக பேச துவங்கிவிட்டனர்.

julie in bigg boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜூலி ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், அவர் தன் முகநூல் பக்கத்தில் இந்த ஷோ குறித்து ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

“வெளியுலகத்தில் நான் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது தான் என் உண்மையான கேரக்டர், ஷோவில் நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதல்ல” என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், பிக் பாஸ் நிகழ்ச்சில் காட்டப்பட்டது தன்னுடைய உண்மையான முகம் இல்லை என்பதேய அவர் கூறவருகிறார் என தெரிகிறது.

உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க இதை கிளிக் செய்யவும்