தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் நடைபெற்று வரும் இயற்கை அழிவுகள் அனைத்தும் சூர்யாவின் படங்களில் வரும் காட்சிகள் போலவே இருக்கிறது என்று மீம் கிரியேட்டரகள் கிளப்பி விட பின்னர் சூர்யா படங்களில் வரும் காட்சிகளை தற்போது நாட்டில் நடக்கும் பிரச்சனைகளோடு ஒப்பிட்டு பல்வேறு மீம்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் சீனாவில் இருந்து வரும் ஒரு நபர் கெட்ட வைரஸை பரப்புவது போன்ற காட்சி காண்பிக்கப்படும்.
தற்போது உலகம் முழுவதும் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதே போல சமீபத்தில் சூர்யா நடித்த காப்பான் படத்தில் வெட்டுக்கிளிகளை பற்றிய காட்சிகள் இடம் பெற்று இருக்கும். அதே போல் வடநாட்டில் விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதை நெட்டிசன்கள் இரண்டு நாளாக சூர்யாவை ட்ரோல் செய்யும் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
சூர்யா நடித்த படங்களில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் நிஜத்திலேயே நடக்கிறது என்று மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் உலகம் இன்றோடு (ஜூன் 21)அழிய போகிறது என்று மாயன் காலண்டரில் குறிப்பிட்டு இருப்பதாகவும், அதனால் இன்றோடு உலகம் அழிந்துவிடும் என்று புரளிகள் கிளம்பி இருந்தன.
இந்த நிலையில் ஜூன் 21 ஆம் தேதியோடு உலகம் அழிய போகிறது என்று சூர்யா அன்றே கணித்துவிட்டார் என்று ஒரு மீம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கஜினி படத்தில் சூர்யாவின் இரண்டாவது டைரியை நயன்தாரா படித்து முடிக்கும் போது ஜூன் 21 ஆம் தேதி வரை தான் அந்த டைரியை எழுதி இருப்பார் சூர்யா. அதனை குறிப்பிட்டே இந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது.