ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருத்தர் என்னை சென்னையில் இருக்காதீங்கன்னு சொன்னாங்க – ரம்யா கிருஷ்ணன்.

0
15726
Ramya-Krishnan
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன், 1970 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தனது 14 வயதில் ‘பலே மித்ருலு ‘ என்ற தெலுகு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமானார். இதுவரை 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஒரு புகழ் பெற்ற நடிகை. தெலுங்கில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை ரம்யாகிருஷ்னன், தமிழில் அறிமுகமான படம் 1983 ஆம் ‘வெள்ளை மனசு’ என்ற படத்தில் தான்.

-விளம்பரம்-

அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டு ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த நடித்த ‘கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ வந்த ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். ஆனால், பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவர்க்கு அமையவில்லை. இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 1999 ஆம் சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா தான். அந்த படத்திற்கு பின்னர் இவரது மார்க்கெட் எகிறியது.

- Advertisement -

இதையும் பாருங்க : பட வாய்ப்புகள் குறைந்ததால் சீரியல் பக்கம் திரும்பிய ஷாஜஹான் பட நடிகை. குடும்ப புகைப்படங்கள் இதோ.

இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் , படையப்பா படத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை டிவி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கலர்ஸ் தொலைக்காட்சியில் ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கி வரும் ‘கோடீஸ்வரி ‘ நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் சிறப்பு போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது ராதிகா, படையப்பா படத்தில் நடித்த அனுபவம் குறித்து கேட்டார்.

-விளம்பரம்-
Colors Kodeeswari | Mon – Fri 8 PM

அந்த நீலாம்பரியோட ஸ்டைலே தனி..!! ??'கோடீஸ்வரி' திங்கள் – வெள்ளி இரவு 8 மணிக்கு #ColorsKodeeswari | Radikaa Sarathkumar | Studio NEXT | Ramya Krishnan

Colors Tamil ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಜನವರಿ 15, 2020

அதற்க்கு பதில் அளித்த ரம்யா கிருஷ்ணன், இந்த படத்தில் ஏண்டா நடித்தோம் என்று ஒவ்வொரு நாளும் நான் யோசித்தேன். அதில் பேசிய வசனங்களை நினைத்து ஒவ்வொரு நாளும் எனக்கு டென்ஷனாக இருந்தது. என்னுடைய வீட்டில் கல் விழ போகிறதா இல்லை எங்காவது காரில் போகும்போது விழப்போகிறது என்று நான் மிகவும் பயந்து இருந்தேன். இந்த படத்தின் கிளைமாக்ஸ் முடிந்த பின்னர் அங்கிருந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் ஒரு, ஒரு மாதம் சென்னையை விட்டு வேறு எங்காவது இருந்து விடுங்கள் என்று சொன்னதும் நான் பயந்துவிட்டேன். மேலும், ஆல்பர்ட் தியேட்டரில் என்னுடைய முகத்தின் மீது வந்து விழுந்தது இதனால் அந்த சிறிய ஓட்டை ஆகிவிட்டது என்னுடைய தங்கை தான் என்னுடைய பெயரைச் சொல்லாமலேயே அமைதியாக சென்று படத்தைப் பார்த்துவிட்டு வந்து விட்டால். அதை பார்த்த உடனே அவள் ஓடி வந்து விட்டால் முதல் நாள் தான் அப்படி இருந்தது அதன் பின்னர் மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.

Advertisement