‘நான் கை தட்டவில்லை, அது எடிட்டிங்’ – மோடியை கேலி செய்ததாக எழுந்த சர்ச்சை. அமுதவனன் விளக்கம்.

0
699
amudhavanan
- Advertisement -

சின்னத்திரையில் சீரியல்கள் மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறார்கள். அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து புதுப்புது வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் மக்கள் அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். பெரும்பாலும் சேனல்களில் அதிகம் பாடல்கள் பாடுவது, நடனம் ஆடுவது, காமெடி நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சியை என பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் சமீப காலமாகவே குழந்தைகள் வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’.

-விளம்பரம்-

இது குழந்தைகள் காமெடி நிகழ்ச்சி. மேலும், மூன்று சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் புலிகேசி வேடத்தில் ஒரு குழந்தையும், மங்குனி அமைச்சர் வேடத்தில் ஒரு குழந்தையும் நடித்திருந்தார்கள். அந்த இரண்டு குழந்தைகளும் பிரதமர் மோடி பற்றியும், கருப்பு பணம் நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட பல நிகழ்வுகளை விமர்சித்து காமெடியாக பேசி இருந்தார்கள்.

- Advertisement -

மோடி குறித்து நிகழ்ச்சியில் குழந்தைகள் பேசியது:

இது குறித்து மாநில பாஜக தலைவர்வர்கள் பலர் கண்டனம் தெரிவித்து டீவ்ட் போட்டு இருந்தார்கள். அதோடு பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், அவரின் ஆடைகள், தனியார் மயமாக்குதல் கொள்கை ஆகியனவற்றை விமர்சித்து சிறுவர்கள் பேசி நடித்தனர். 10 வயதே நிரம்பிய அந்த சிறாருக்கு பேசியதன் அர்த்தம் தெரிந்திருக்காது. இது முழுக்க முழுக்க சேனலின் திணிப்பு தான். இதை உடனடியாக சேனல் திரும்பப் பெற வேண்டும்.

கண்டனம் தெரிவிக்கும் பாஜக உறுப்பினர்கள் :

அத்துடன் பொது மன்னிப்பும் கோர வேண்டும். சேனல், நிகழ்ச்சி தயாரிப்பாளர், நிகழ்ச்சியின் நீதிபதிகள் என அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கொந்தளித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியைப் பற்றிய நியூஸ் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆக உள்ளது. இது குறித்து சேனலின் பதில் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இப்படி இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான வழிகாட்டி என்ற பொறுப்பில் நடிகரும், சின்னத்திரை பிரபலமான அமுதவாணன் இருக்கிறார்.

-விளம்பரம்-

விளக்கம் கொடுத்த சின்னத்திரை நடிகர் அமுதவாணன்:

இது குறித்து அவரிடம் பேட்டி எடுக்கப்பட்ட போது அவர் கூறியிருப்பது, நிகழ்ச்சி ஒளிபரப்பானதில் இருந்து இப்போ வரைக்கும் நிறைய பேர் போன் பண்ணி கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், நல்ல வேளையாக யாரும் தவறாக பேசவில்லை. சிலர் சிறுகுழந்தைகள் பிரதமரை தவறாக பேசி இருக்காங்க. நீங்களும் கைதட்டி ரசிகர்களே என்று கேட்டாங்க. ஆனால், உண்மையைச் சொல்லப் போனால், நான் கையெல்லாம் தட்டவில்லை. அன்னைக்கு சூட்டிங்கில் எடுத்துக்கிட்ட கான்செப்டில் சுமாராக இருந்த கான்ஷப்ட் இதுதான்.

நடந்தது இது தான்:

மேடையில் ஏறியதும் பசங்களும் பேச வேண்டிய டயலாக் மறந்து இருந்தப்போ எடுத்துக் கொடுக்க வேண்டியதாக இருந்தது. நடுவர்கள் உள்ளிட்ட ஆடியன்ஸ் அமைதியாக தான் இருந்தார்கள். அதனால் பசங்களை என்கரேஜ் செய்யவேண்டும் என்று தான் நான் சில இடங்களில் கை தட்டினேன். ஆனால், பிரதமரை குறிப்பிட்டு சொல்லும் போது நான் கை தட்டவில்லை. சில இடங்களில் நான் கைதட்டியதை எடிட் செய்து அந்த இடத்தில் சேர்த்துவிட்டார்கள். பொதுவாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளை இது மாதிரி பண்ணுவது வழக்கம் தான் என்று கூறியிருந்தார்.

Advertisement