சமூக அக்கறை எல்லாம் பேசுற நீங்க, ஓட்டு போடா ஏன் வரல – பத்திரிக்கையாளர் கேட்ட நச் கேள்வி. ஜோதிகா கொடுத்த விளக்கம்.

0
466
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஜோடிகளாக வலம் வருபவர் சூர்யா- ஜோதிகா. இவர்கள் இருவரும் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள். அதிலும் தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்புகள் வந்தாலும் பல போராட்டங்களுக்கு பிறகு இருவருமே திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். மீண்டும் இவர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

- Advertisement -

சூர்யா-ஜோதிகா திரைப்பயணம்:

அதனைத் தொடர்ந்து இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே, தம்பி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், இவர் நடிகை என்பதை தாண்டி தயாரிப்பாளரும் ஆவார்.

ஜோதிகா படம்:

சூர்யா- ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வைக்கிறார்கள். இதுவரை இவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதோடு சமீப காலமாகவே ஜோதிகா உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஜோதிகா பாலிவுட்டிலும் கால் தடம் பதித்திருக்கிறார். அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த சைத்தான் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

ஜோதிகா குறித்த சர்ச்சை:

இதை தொடர்ந்து இவர் இன்னும் இரண்டு பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் விஜய், அஜித் என பல பிரபலங்கள் ஓட்டு போட்டார்கள். நடிகர் சூர்யா, மும்பையில் இருந்து வந்து தன்னுடைய ஓட்டை போட்டிருந்தார். ஆனால், ஜோதிகா மட்டும் நேபாளிக்கு டூர் சென்றிருந்ததால் ஓட்டு போட முடியவில்லை என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இதற்கு நெட்டிஷன்கள் பலரும் ஜோதிகாவே விமர்சித்து இருந்தார்கள்.

ஜோதிகா கொடுத்த விளக்கம்:

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா சொன்னது, பொதுவாகவே நான் எல்லா தேர்தலிலும் ஓட்டு போட்டு இருக்கிறேன். சில தவிர்க்க முடியாத சூழ்நிலை, உடம்பு சரியில்லாமல், வெளியில் இருந்தால் ஓட்டு போட முடியாமல் போவது வழக்கம். இது எல்லோருக்கும் நடக்கும் விஷயம் தான். தனிப்பட்ட காரணத்தினால் தான் என்னால் ஓட்டு போட வர முடியவில்லை. நடிப்பிலும் என்னுடைய குழந்தைகளின் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். அதுவே சரியாக இருக்கிறது. அரசியலில் வருவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement