இந்தி படங்களை தென்னிந்திய ரசிகர்கள் அதிகம் பார்ப்பதில்லை, ஆனால் – ஜோதிகா

0
203
- Advertisement -

தென்னிந்திய ரசிகர்கள் பற்றி ஜோதிகா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின் தான் இவர் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்தார். திருமணத்திற்க்கு பிறகு ப்ரேக் எடுத்துக்கொண்ட ஜோதிகா 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிகை என்பதை தாண்டி தயாரிப்பாளரும் ஆவார். தற்போது ஜோதிகா பாலிவுட்டிலும் கால் தடம் பதித்திருக்கிறார். அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த சைத்தான் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி இருந்த ஸ்ரீகாந்த் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

ஜோதிகா பேட்டி:

தற்போது ஜோதிகா பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜோதிகா, 25 வருடங்கள் பாலிவுட்டில் எந்த சத்தம் இல்லாமல் இருந்தேன். எனக்கு பாலிவுட்டில் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப சந்தோஷமாக, சப்ரைஸ் ஆகவும் இருக்கிறது. எனக்கேற்ற நல்ல கதை இல்லாமல் தான் இத்தனை நாட்கள் நான் பாலிவுட்டில் நடிக்காமல் இருந்தேன்.

ரசிகர்கள் பற்றி சொன்னது:

நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக பாலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் நடிப்பேன். இனி தென்னிந்திய- வட இந்திய ரசிகர்கள் என இந்திய சினிமா ரசிகர்களை பிரித்து பார்க்க வேண்டாம். தென்னிந்திய பக்கம் இந்தி திரைப்படங்களை அதிகமாக பார்க்க மாட்டார்கள். ஆனால், வட இந்தியாவில் தென்னிந்திய திரைப்படங்களை அதிகம் பார்க்கிறார்கள். வட இந்தியாவில் ரஜினி சார் பற்றிய பதிவுகள் எல்லாம் நிறைய சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்திய சினிமா குறித்து சொன்னது:

இந்திய சினிமாவில் இப்படி வித்தியாசங்கள் இருப்பதை பார்ப்பதற்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. வட இந்தியா- தென்னிந்தியா என்று சினிமா ரசிகர்களை பிரிக்காமல் இந்திய ரசிகர்களாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே ஜோதிகா நிகழ்ச்சி ஒன்றில், எல்லோரும் கோயில் உண்டியலில் காசு போடுறீங்க, கோயிலை பெயின்ட் செய்து அழகாகப் பராமரிக்க உதவி செய்றீங்க. அதே மாதிரி அரசு மருத்துவமனைகளும், அரசுப் பள்ளிக்கூடங்களும் ரொம்பவே முக்கியம்.

Jyothika

ஜோதிகா குறித்த சர்ச்சை:

மருத்துவமனைகளை பராமரிக்க உதவுங்கள் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசி இருந்தது மிக பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. மேலும், இந்தி திணிப்பு குறித்து ஜோதிகா சொன்னது சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதேபோல் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஜோதிகா ஓட்டு போட வராமல் இருந்தது குறித்து பல கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு அவர் விளக்கமும் கொடுத்து இருந்தார். இப்படி ஜோதிகா எதார்த்தமாக பேசின பல விசயங்களை இணையத்தில் சர்ச்சையாகி வைரலாக்கி விடுகிறார்கள்.

Advertisement