சூர்யா படங்களுக்கு கிடைக்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து நடிகர் ஜோதிகா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவர் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்தார். அதன் பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். பின் இவர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிகை என்பதை தாண்டி தயாரிப்பாளரும் ஆவார். சூர்யா- ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை இவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஜோதிகா திரைப்பயணம்:
மேலும், நீண்ட இடைவெளிக்கு பின் ஜோதிகா பாலிவுட்டிலும் கால் தடம் பதித்திருக்கிறார். அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த சைத்தான் படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் வெளியாகி இருந்த ஸ்ரீகாந்த் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து தற்போது இவர் தமிழில் லயன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவர் டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இதில் ஷபானா ஆஸ்மி, அஞ்சலி ஆனந்த் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
ஜோதிகா பேட்டி:
இந்த படம் நெட்பிளிக்சில் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய கணவரின் படங்களுக்கு கிடைக்கும் நெகட்டிவ் விமர்சனம் குறித்து ஜோதிகா கூறியிருப்பது, எனக்கு எப்போதுமே மோசமாக வரும் படங்களின் மீது தான் பிரச்சனை இருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் அந்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. அந்த படங்களை எல்லாம் பெரிய மனதுடன் நன்றாக விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், என்னுடைய கணவர் திரைப்படங்களை மட்டும் மோசமாக விமர்சனம் செய்கிறார்கள்.
கங்குவா படம்:
இதை என்னால் உணர முடிகிறது. படத்தில் சில பகுதிகள் பிடிக்காமல் இருக்கலாம். மொத்தமாகவே ஒரு படத்திற்கு பயங்கரமாக உழைப்பு கொடுக்கிறார்கள். ஆனால், சில மோசமான படங்களை விட கடுமையான விமர்சனத்தை இந்த படங்களுக்கு கொடுக்கிறார்கள். அது என்னை ரொம்பவே பாதித்தது. ஊடகங்கள் இதைப்பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது நினைத்து நான் வருத்தம் அடைகிறேன் என்று கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த கங்குவா படம் மிக பெரிய அளவில் தோல்வி சந்தித்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்த படம் குறித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை சொல்லி இருந்தார்கள். இதற்கு ஏற்கனவே போட்ட பதிவில் ஜோதிகா, கேமரா பணியும், அதன் செயல்பாடும் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பார்த்ததில்லை.
ஜோதிகா பதிவு:
நான் ஊடகங்களில் வந்த எதிர்மறை பாராட்டுக்கள் பார்த்து ரொம்பவே ஆச்சரியமானேன். காரணம், அவர்கள் இதே மாதிரி இதற்கு முன் வந்த பெரிய பட்ஜெட் படங்களை இந்த அளவுக்கு எப்போதும் விமர்சனம் செய்யவில்லை. அவர்கள் படங்களில் பெரும்பாலும் பழமையான கதை, பெண்களை இழிவுபடுத்துதல், இரட்டை அர்த்த உரைகள் பேசுதல், மிக மிக அதிகப்படியான ஆக்சன் காட்சிகள் உள்ளது. ஆனால், கங்குவாவின் நேர்மறையான சாதனைகளை யாருமே கண்டு கொள்ளவில்லை. இரண்டாம் பாதியில் பெண்களுக்கான ஆக்சன் காட்சி யாருமே விமர்சிக்கவில்லை. அவர்கள் விமர்சனம் செய்யும் பொழுது நல்ல பாகங்களை விமர்சனம் செய்ய விட்டார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று கூறி இருந்தார்.