இன்ஸ்டாவில் நுழைந்த ஜோதிகா, முதல் புகைப்படம் இதான் – 2 மணி நேரத்தில் இத்தனை லட்சம் பாலோவர்ஸ்.

0
2079
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90 கால கட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. ஹிந்தி படத்தின் மூலம் தான் ஜோதிகா அவர்கள் சினிமா துறைக்குள் என்ட்ரி கொடுத்தார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் , விக்ரம், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் கொடி கட்டி பறந்தார்.

-விளம்பரம்-

சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் இரண்டு குழந்தைக்கு தாயான ஜோதிகா பின்னர் சினிமாவில் பிரேக் எடுத்துக்கொண்டார். பின்னர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் ரீ-என்ட்ரி கொடுத்தார்.திருமணத்திற்கு பின்னர் இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய பல படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு நடிகர் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்து வெளிவந்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : 14 வயதில் ஒரே நாளில் 2 பாடல் ரெக்கார்டிங் – முதல் படத்திலேயே கலக்கியிருக்கும் யுவன் பற்றிய அறிய தருணம்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது ஜோதிகா அவர்கள் முதன் முறையாக இன்ஸ்டாவில் இணைந்துள்ளார். மேலும், தன் மனைவி ஜோதிகாவை வரவேற்கும் வகையில் நடிகர் சூர்யா அவர்கள் புகைப்படம் ஒன்று போஸ்ட் செய்து ‘என் வலிமையான பொண்டாடி, இன்ஸ்டாவில் பார்ப்பது திரில்ளாக இருக்கிறது’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. ஜோதிகா இன்ஸ்டா கணக்கை துவங்கிய 2 மணி நேரத்தில் 1 மில்லியன் பாலோவர்களை எட்டிவிட்டார். தற்போது நடிகை ஜோதிகா அவர்கள் உடன்பிறப்பே என்ற படத்தில் நடிக்கிறார். இது இவரின் 50வது படம். இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஜோதிகா அவர்கள் கிராமத்து பெண் என்ற வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

-விளம்பரம்-
Advertisement