சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஜோதிகா பெயரை நீக்கிய சூர்யா – காரணம் என்னன்னு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
582
surya
- Advertisement -

சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஜோதிகா பெயரை சூர்யா நீக்கி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஜோடிகளாக வலம் வருபவர் சூர்யா- ஜோதிகா. இவர்கள் இருவரும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள். அதிலும் தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். மேலும், இவர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சூர்யா-ஜோதிகா திரைப்பயணம்:

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த உடன் பிறப்பே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அதோடு திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதேபோல் கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த ஜெய்பீம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருந்தது. அதனை தொடர்ந்து இவர் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.

2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம்:

தற்போது சூர்யா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளரும் ஆவார். சூர்யா- ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வைக்கிறார்கள். இதுவரை இவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விருமன்.

-விளம்பரம்-

விருமன் படம்:

தற்போது கார்த்தி அவர்கள் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோ. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜோதிகா பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, எந்த ஒரு படத்திலும் தயாரிப்பு எனுமிடத்தில் சூர்யா- ஜோதிகா என்றுதான் பெயர் இணைந்து வரும்.

ஜோதிகா பெயரை நீக்கிய சூர்யா:

ஆனால், விருமன் திரைப்படத்தில் தயாரிப்பு இடத்தில் சூர்யா என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிகாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதற்கு காரணம் இந்த திரைப்படம் மசாலா கலந்த திரைப்படம் என்பதினால் தான் ஜோதிகா பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இன்னொரு சிலர், ஜோதிகாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே சண்டை என்று தவறான வதந்திகளை சோசியல் மீடியாவில் பரப்பி வருகிறார்கள். ஆனால், இதற்கு உண்மையான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இதற்கு சூர்யா- ஜோதிகா தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement