2000ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. அதன் பின்னர் தன்னுடன் நடித்த நடிகர் சூரியாவுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செயதுகொண்டார். கடந்த 2002ஆம் ஆண்டு விஜய் மற்றும் சூரியா நடித்து வெளிவந்த படம் ப்ரண்ட்ஸ்.
இந்த படம் மெகா ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை தேவயானி நடித்திருப்பார். ஆனால், முதலில் தேவயானிக்கு பதிலாக ஜோதிகாவிடம்தான் பேசப்பட்டது.
இறுதியில் ஜோதிகா படத்திலிருந்து விலகவே, பின்னர் தேவயானி நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் கடந்த தீபாவளிக்கு விஜய் நடித்து வெளிவந்த படம் மெர்சல். இந்த படத்தில் 80களில் வரும் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நித்யா மேனன்.
ஆனால், இந்த கேரக்டரில் நடிக்கவும் முதலில் ஜோதிகாவிடம் தான் பேசப்பட்டது. பின்னர் அவர் படத்தில் இருந்து விலகியதால் நித்யா நடித்தார். ஜோதிகா விலகிய இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மீண்டும் மீண்டும் விஜய் படத்தில் இருந்து ஜோதிகா விலகினாலும் அதிர்ஷ்டம் அவரை தேடி வந்துகொண்டுதான் இருக்கிறது.