இந்த மாயாஜால அறிவியலை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வோம் – போதி தர்மரை போல ஜோதிகா போட்ட பதிவு.

0
486
jyothika
- Advertisement -

அடுத்தத் தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் அறிவியலை குறித்து நடிகை ஜோதிகா வெளியிட்ட பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஜோடிகளாக வலம் வருபவர் சூர்யா- ஜோதிகா. இவர்கள் இருவரும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள். அதிலும் தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். மேலும், ஜோதிகா 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஜோதிகா நடித்த படங்கள்:

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த உடன் பிறப்பே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் சமீபத்தில் ஓய்வெடுப்பதற்காக கேரளா சென்றிருந்தனர்.

ஜோதிகா வெளியிட்ட பதிவு:

இது குறித்த செய்தி ஏற்கனவே சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் கேரளாவில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் ஆயுர்வேதத்தில் மாயாஜாலம் குறித்து நடிகை ஜோதிகா பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, திருச்சூர் ராஜ கடற்கரையில் எனது வாழ்க்கையில் மிகவும் நிறைவான 21 நாட்களாக சிறிது நேரம் ஒதுக்கினேன்.

-விளம்பரம்-

மாயாஜால அறிவியல்:

உண்மையான மந்திரம் இயற்கையில் அனைத்தையும் குணப்படுத்தும் சக்தி படைத்தது என்று என்னை நம்ப வைத்த இடம். இந்தியர்களாகிய நாம் நமது நாட்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் ஆயுர்வேதம் மற்றும் யோகா பயிற்சி 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்த அறிவியல் இது. இதை செய்வதன் மூலம் அவற்றை மதிப்போம். மேலும், இந்த மாயாஜால அறிவியலை நமது அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவோம் என்று ஜோதிகா கூறியுள்ளார்.

வைரலாகும் ஜோதிகாவின் பதிவு:

இப்படி ஜோதிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவும், பதிவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், ஜோதிகாவின் பதிவுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். அதோடு சூர்யாவின் ஜெய்பீம் படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சூர்யாவின் பட ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.

Advertisement