2000ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. முதன் முதலாக சினிமா துறைக்குள் ஹிந்தி படத்தின் மூலம் தான் ஜோதிகா என்ட்ரி கொடுத்தார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் , சூர்யா என்று பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் கொடி கட்டி பறந்தார். இவர் தமிழில் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார்.
பின் பூவெல்லாம் கேட்டுப்பார், சினேகிதியே, குஷி, டும் டும் டும், பூவெல்லாம் உன் டும் தூள், காக்க காக்க, திருமலை, பேரழகன், சந்திரமுகி, அருள், ஜில்லுனு ஒரு காதல் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். அதன் பின்னர் தன்னுடன் நடித்த நடிகர் சூரியாவுடன் காதல் ஏற்பட்டு 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும், தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள். இந்நிலையில் நடிகை ஜோதிகா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் தொகுப்பாளர் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தமிழ் வார்த்தை என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு ஜோதிகா அவர்கள் கூறியது, நானும் சூர்யாவும் அதிகமாக தமிழில் தான் பேசுவோம்.
குழந்தைகளிடம் நான் நிறைய தமிழில் பேசுவேன். என் பொண்ணு நல்லா ஹிந்தி பேசுவாள். ஆனால், என் பையனுக்கு ஹிந்தி பேச புடிக்காது. அம்மா தயவு செஞ்சி எனக்கு ஹிந்தி நையி என்று சொல்லுவான். எனக்கு என் பையன் ஹிந்தி பேசணும் என்று ரொம்ப ஆசை. என் குழந்தைகல் எல்லா மொழிகளையும் கத்துக்கணும்ன்னு எனக்கு ஆசை. எனக்கு தெரியல என்ன பண்ணுவாங்கன்னு என்று கூறினார்.
ஜோதிகா அவர்கள் திருமணத்திற்குப் பிறகு சினிமா துறையிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள மொழி படமான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு 36 வயதினிலே என்ற தலைப்பும் வைத்தார்கள். ஜோதிகா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா துறைக்குள் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து ஜோதிகா அவர்கள் மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, மகளிர் மட்டும், செக்க-சிவந்த-வானம், ஜாக்பாட், தம்பி என பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் பொன்மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளிவரப்போகிறது. நடிகை ஜோதிகா அவர்கள் திருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.