சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வாக்களிக்காத காரணம் குறித்து ஜோதிகா சொன்ன விளக்கம் சமூக வலைத்தளத்தில் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஜோடிகளாக வலம் வருபவர் சூர்யா- ஜோதிகா. இவர்கள் இருவரும் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள். அதிலும் தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.
பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்புகள் வந்தாலும் பல போராட்டங்களுக்கு பிறகு இருவருமே திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். மீண்டும் இவர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
சூர்யா-ஜோதிகா திரைப்பயணம்:
அதனைத் தொடர்ந்து இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே, தம்பி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், இவர் நடிகை என்பதை தாண்டி தயாரிப்பாளரும் ஆவார்.
வாக்களிக்காத ஜோதிகா :
தற்போது ஜோதிகா பாலிவுட்டிலும் கால் தடம் பதித்திருக்கிறார். அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த சைத்தான் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதை தொடர்ந்து இவர் இன்னும் இரண்டு பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் விஜய், அஜித் என பல பிரபலங்கள் ஓட்டு போட்டார்கள். நடிகர் சூர்யா, மும்பையில் இருந்து வந்து தன்னுடைய ஓட்டை போட்டிருந்தார்.
ஜோதிகா விளக்கம் :
ஆனால், ஜோதிகா மட்டும் நேபாளிக்கு டூர் சென்றிருந்ததால் ஓட்டு போட முடியவில்லை என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இதற்கு நெட்டிஷன்கள் பலரும் ஜோதிகாவே விமர்சித்து இருந்தார்கள்.தற்போது இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா சொன்னது, பொதுவாகவே ஒவ்வொரு வருடமும் தான் தவறாமல் வாக்களிப்பதாக கூறினார். அப்போது இடைமறைத்த பத்திரிகையாளர் 5 ஆண்டுக்கு ஒரு முறை தான் தேர்தல் என்று கூறி இருந்தார்.
ஆன்லைன் ஓட்டு :
உடனே அதனை திருத்திக்கொண்டு ஜோதிகா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிக்கிறேன் என்று கூறினார். சில தவிர்க்க முடியாத சூழ்நிலை, உடம்பு சரியில்லாமல், வெளியில் இருந்தால் ஓட்டு போட முடியாமல் போவது வழக்கம். இது எல்லோருக்கும் நடக்கும் விஷயம் தான். தனிப்பட்ட காரணத்தினால் தான் என்னால் ஓட்டு போட வர முடியவில்லை. பின்னர், தான் வாக்களிக்காததற்கு காரணம் கூற முயன்ற ஜோதிகா அதுதான் இப்போது ஆன்லைன் வாக்கு வந்துவிட்டதே என்று கூறினார்.’ என்று கூறி இருந்தார்.
குவியும் விமர்சனம் :
ஜோதிகாவின் இந்த கருத்தை பலரும் கேலி செய்து வருகின்றனர். ஜோதிகா சமூக வலைதளங்களில் போடப்படும் வாக்கெடுப்பை ஓட்டு என்று நினைத்துவிட்டார் என்றும், வெயிலில் நின்று வாக்களிக்கும் சாமானியர்களை பார்த்தால் எப்படி தெரிகிறது? என்று கேலி செய்து வருகின்றனர். இந்த நிலையில்,ஜோதிகாவின் பேச்சை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், இணையதளத்தில் வாக்களிக்க முடியும் என்பது எனக்குத் தெரியாது. வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட வரிசையில் நின்று எனது நேரத்தை வீணடித்து விட்டேன் என்று கேலியாக பதிவிட்டுள்ளார்.