இந்த வயதிலும் தன் கணவருக்கு Fitnessல் Tough கொடுக்கும் ஜோ – வைரலாகும் வீடியோ.

0
679
Surya
- Advertisement -

தன்னுடைய கணவர் சூர்யாவையே மிஞ்சும் அளவிற்கு ஜோதிகா செய்திருக்கும் வொர்க் அவுட் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் முன்னணி 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின் அஜித் நடித்த வாலி படத்தின் மூலம் தமிழில் ஜோதிகா என்ட்ரி கொடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் உள்ள விஜய்,அஜித்,விக்ரம்,ரஜினி,கமல், சூர்யா பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

சூர்யா- ஜோதிகா:

தற்போது தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஜோடிகளாக சூர்யா- ஜோதிகா வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா அவர்கள் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

-விளம்பரம்-

ஜோதிகா நடித்த படங்கள்:

அதனைத் தொடர்ந்து இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் உடன் பிறப்பே. இந்த படத்தில் சமுத்திரக்கனி, சசிகுமார் பட நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

சோசியல் மீடியாவில் ஜோதிகா:

இதனை தொடர்ந்து சில படங்களில் ஜோதிகா கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் நடந்த 68 வது தேசிய திரைப்பட விருது விழாவில் சூரரை போற்று படத்திற்காக சூர்யாவிற்கும், ஜோதிகாவிற்கும் தேசிய விருது வழங்கப்பட்டிருந்தது. அதற்கான புகைப்படங்களை எல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் ஜோதிகா அவர்கள் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அவ்வபோது எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை எல்லாம் ஷேர் செய்து வருகிறார்.

ஜோதிகா ஒர்க்அவுட் வீடியோ:

இதனால் ஜோதிகாவை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் ஜோதிகா உடைய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அந்த வீடியோவில், ஜோதிகா அவர்கள் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்திருக்கிறார். பொதுவாகவே சூர்யா தான் தீவிரமாக ஒர்க்அவுட் செய்வார். இது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், தன்னுடைய கணவர் சூர்யாவையே மிஞ்சும் அளவிற்கு ஜோதிகா ஒர்க்அவுட் செய்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாயை பிளந்து வீடியோவிற்கு லைக்ஸ்குகளை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement