இளையராஜாவை தொடர்ந்து மோடி புகழ் பாடிய பாக்கியராஜ் – நெட்டிசன்களின் Reaction என்ன பாருங்க.

0
413
- Advertisement -

பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குநர் கே பாக்யராஜ் பேசியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் சிறந்த திரை கதை இருக்கும் படங்களை எடுப்பது தான் பாக்கியராஜின் தனி சிறப்பு. தொடர்ந்து படங்களை இயக்கி வந்த பாக்கியராஜ் நடிகராகவும் கொடிகட்டி பறந்தார். அதேபோல் பாக்யராஜின் மகன் சாந்தனுவும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

- Advertisement -

பாக்யராஜ் திரைப்பயணம்:

பின் இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். இறுதியாக பாக்யராஜ் அவர்கள் தன் மகனை வைத்து ‘சித்து +2’ என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் படத்தை இயக்குவது இல்லை என்றாலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக பாக்கியராஜ் அவர்கள் தன் மகனுடன் இணைந்து புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

சோசியல் மீடியாவில் பாக்யராஜ்:

இது ஒரு பக்கமிருக்க, சமீபகாலமாக பாக்கியராஜ் சமூகப் பிரச்சனைகளில் தன்னுடைய கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று பாக்கியராஜ் கூறியிருக்கும் கருத்து சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. பிரதமரின் மக்கள் நல திட்டங்கள் மற்றும் புதிய இந்தியா 2022 என்ற நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குநர் கே பாக்யராஜ் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

நூல் வெளியீட்டு விழாவில் பாக்யராஜ்:

மேலும், இந்த நூலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட பாக்கியராஜ் பெற்றுக்கொண்டார். பின் இந்த நிகழ்ச்சியில் பாக்கியராஜ் கூறியிருப்பது, அண்ணாமலை இங்கிருந்து கர்நாடகா சென்று சிறப்பாக பணியாற்றினார். நான் கர்நாடகத்தில் இருந்தபோது அவரைப் பற்றி பெருமையாகப் பேசுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். பாஜகவுக்கு சரியான தலைவரைத் தேர்வு செய்துள்ளார்கள். பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவதை தான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன். பிரதமர் வெளிநாடு செல்வதை ஒரு சிலர் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி குறித்து பாக்யராஜ் கூறியது:

ஆனால், அவர் ஓய்வில்லாமல் எப்படி சென்றார்? அவர் உடலை எப்படி கவனித்துக் கொள்கிறார்? என்று நான் ஆச்சரியமாக பார்த்தேன். இந்தியாவுக்கு இப்படி ஒரு துணிச்சலான பிரதமர் தேவை. பிரதமர் மோடியை விமர்சித்து வருபவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நல்லவர்கள் அவரைப் பற்றி தவறாக பேச மாட்டார்கள். பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடியை புகழ்ந்து பாக்கியராஜ் பேசியுள்ளார். இப்படி இவர் பேசியிருக்கும் பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement