‘ட்ரெண்டிங் எல்லாம் ஒரு முறை தான் மரியாதை’ – இறைவி பாடல் ரீல்ஸ் புகழ் பெண்ணுக்கு குவியும் நெகடிவ் கமெண்ட்ஸ். அவரின் பதிலடி.

0
1367
Trending
- Advertisement -

சமூக வளைத்தைலத்தில் திடீரென்று பல பேர் பிரபலமடைந்துவிடுகின்றனர். அதிலும் ட்ரோல் மற்றும் மீம்ஸ் மூலம் பலர் பிரபலமாகி இருக்கின்றனர். அதிலும் இன்ஸ்டா ரீல்ஸ் வந்ததில் இருந்தே ஏராளமானோர் பிரபலமாகி இருக்கிறார்கள். மாதம் எதாவது ஓரிரண்டு விஷயங்கள் ட்ரெண்டிங்கில் வந்தால் அதை ஒரு வாரம் முதல் ஒரு மாசம் வரை ட்ரெண்டு செய்து விடுகிறார்கள் நெட்டிசன்கள். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இறைவி படத்தில் வந்த எஸ் ஜே சூர்யா பாட்டுக்கு vibe செய்து இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட பெண் படு பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

இறைவி திரைப்படத்தில் வரும் ‘கண்ண காட்டி சிரிச்சா’ பாடலுக்கு ஒரு இளம்பெண் தன் அறையில் நடனமாடிய வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோவில் அந்த பெண்ணின் நடனத்தை கண்டு ரசித்த பலரும் இந்த மாதிரி vibe செய்யும் பெண் கிடைத்தால் அதிர்ஷ்ட்டம் தான் என்று புகழ்ந்து தள்ளினார். இதற்கு எல்லாம் மேலாக இந்த வீடியோவை பார்த்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பெண்ணை புகழ்ந்து ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

அதில் இந்த படம் வெளியான போது கூட இந்த பாடல் இவ்வளவு வைரலாகவில்லை எனவும் அந்த பெண் ஒரு டான்ஸ் ஆடி வெளியிட்ட பின் அந்த பாடலை அனைவரும் கொண்டாடி வருகின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும் அவர் டான்சரா என தெரியவில்லை, ஆனால் அவர் ஆடிய நடனம், புரோஃபெஷனல் டான்சர்களை விட அதிகம் ஈர்த்ததாக தெரிவித்தார். இதனை அந்த வைரல் பெண்ணும் தன் இன்ஸ்ட்டா பக்கத்தில் ஷேர் செய்தார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அந்த பெண்ணை இன்ஸ்டாகிராமில் தேடி சென்று பலரும் பாலோ செய்தார்கள். தற்போது அந்த பெண்ணை கிட்டத்தட்ட 5லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். ஆனால், இப்போது அவர் ட்ரெண்டான அளவு ட்ரோல்களையும் சந்தித்து வருகிறார் அந்த பெண். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நடனமாடி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதற்க்கு பெரும்பாலும் நெகட்டிவ் கமெண்ட்கள் தான் வந்தது. அதிலும் குறிப்பாக ஒரு முறை தான் மரியாதை மறுபடியும் மறுபடியும் ஒரே மாதிரி பண்ண கூடாது என்றெல்லாம் கமன்ட் போட துவங்கிவிட்டனர். ரசிகர்களின் இந்த கமெண்ட்களை கண்டு இந்த பதிவில் கமெண்ட் ஒன்றை போட்டு இருக்கும்அந்த வைரல் பெண் ‘நான் எப்போதும் போல பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கிறேன்.

இதற்கு முன்னால் நீங்கள் என்னை ஃபாலோ செய்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், இங்கே ஏராளமான புது ஆட்கள் இருக்கிறார்கள். நான் வைரலான அந்த பழைய விஷயத்தை வைத்து ஆதாயம் தேட பார்க்கிறேன் என்று சிலர் நினைப்பதால் என்னை நான் மாற்றிக் கொள்ள முடியாது. இதுதான் நான் என்று கமெண்ட் செய்து அந்த கமெண்டடை அந்த பதிவில் முதல் கமெண்டாக Pin செய்திருக்கிறார்.

மேலும், இதுகுறித்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ‘ நான் எப்போதும் பாசிட்டிவாக இருக்கும் ஒரு இடத்தில் இப்போதெல்லாம் நான் எந்த கண்டன்ட் போட்டாலும் அதற்கு நெகட்டிவ் கமெண்ட்கள் தான் வருகிறது. நான் எதையும் எதிர்பார்த்து இதையெல்லாம் செய்யவில்லை. எனக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்ய விரும்புகிறேன். நீங்கள் ஒருவேளை என்னுடைய பக்கத்திற்கு புதிதானவர்கள் என்றால் நான் நானாக இருக்க விரும்புகிறேன், சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியாக இருக்க ஆசைப்படுகிறேன் என்பதை மட்டும் தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் செய்யும் விஷயங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். அதே போல நீங்களும் என்னை பின்தொடர வேண்டாம்’ என்றும் கூறியுள்ளார்.

Advertisement