நீண்ட இடைவெளிக்கு பிறகு காதல் கொண்டேன் சுதீப் சரங்கி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் 2003 இல் வெளியான காதல் கொண்டேன் படத்தில் சோனியா அகர்வால் காதலனாக நடித்தவர் சுதீப் சரங்கி. கொல்கத்தாவில் பிறந்த இவர் தனது படிப்பை முடித்து கொல்கத்தாவில் மாடலிங் துறையில் ஈடுபட்டு பல ராம்ப் வாக் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார். பின்னர் நடிப்பில் ஆர்வம் ஏற்பட இவர் கூத்து பட்டறையில் சேர்ந்து பல மேடை நாடகங்கள் மற்றும் ஹிந்தி பெங்காலி படங்களில் நடித்தார்.

இதன் பின் 2003 இல் செல்வராகவன் இவருக்கு காதல் கொண்டேன் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் 2004 இல் வெளியான என்னமோ புடிச்சிருக்கு என்ற படத்தில் நடித்தார். அந்த படம் இவருக்கு நல்ல பெயரை தரவில்லை. பின்னர் பெங்காலி,ஹிந்தி துறையில் கவனத்தை செலுத்தினர். மேலும், 2005 இல் தும் சலாம் என்னும் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் படவாய்ப்புகள் வராததால் டீவி சீரியல்களில் நடிக்க துவங்கினர். இந்த ஹிந்தியில் இவர் நடித்த பாபா ஐசோ வர் தூண்டூ, சிஐடி போன்ற சீரியல்கள் இவருக்கு பிரபலத்தை பெற்றுதந்தது.

Advertisement

அதன் பிறகு 2015 இல் வெளியான குந்து கி கன் மற்றும் 2017 இல் வெளியான ராணுவ வரலாற்றை மையப்படுத்தி எடுக்கபட்ட ராக் தேஸ் போன்ற படங்களில் நடித்தார். இவர் சகாரா ஒன் ஹான்டட் நைட்ஸ் என்ற படத்தில் பெண் வேடம் அணிந்து நடித்திருப்பார். இந்த வேடம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது ஹிந்தி சீரியல்களில் நடித்து வருகிறார் சுதீப். தற்போது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார் சுதீப். இந்நிலையில் டாக்ஸி டிரைவர் ஆடை அணிந்து சுதீப் பகிர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே என்னாச்சு என்று வருத்தத்தில் விசாரித்து இருக்கிறார்கள்.

சுதீப் அளித்த பேட்டி:

இந்நிலையில் சுதீப் அவர்கள் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், என்னை வாழ வைத்த தமிழ் சினிமாவால் நான் ரொம்ப நன்றாக இருக்கிறேன். காதல் கொண்டேன் படம் வெளியாகி இத்தனை வருடங்கள் கடந்தும் தமிழ் மக்கள் என்னை மறக்காமல் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. காதல் கொண்டேன் என்னுடைய முதல் படம். முதல் படமே ஹிட் கொடுத்தது கடவுளுடைய ஆசிர்வாதம் தான். இந்த நேரத்தில் படத்தை தயாரித்த கஸ்தூரிராஜா சார், செல்வராகவன் சார், தனுஷ் சார் மூவருக்கும் என்னுடைய பெரிய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய போட்டோவை பார்த்து தான் செல்வராகவன் சார் ஆதி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார்.

Advertisement

காதல் கொண்டேன் படம் குறித்து சொன்னது:

இந்த படத்திற்காக அனைவருமே கடுமையாக உழைத்தோம். அதற்கேற்றவாறு ரிசல்ட் நல்லபடியாக வந்தது. இடைவெளில் தனுஷ் சார் என்னுடன் வந்து கிரிக்கெட் விளையாடியதெல்லாம் மறக்கவே முடியாது. படத்தின் வெற்றிக்கு தனுஷ் சாரின் நடிப்பும், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் தான் முக்கிய காரணம். முதல் படமே பெரிய பிரபலங்களுடன் அமைந்தது நான் செய்த பாக்கியமாக கருதுகிறேன். எனக்கு பெயர், புகழ், பணம் எல்லாம் கிடைத்தது. என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த செல்வராகவன் சார் மீது எனக்கு எப்போதும் அன்பும் மரியாதையும் இருக்கிறது. 2002 ஆம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டு வரை நான் சென்னையில் தான் இருந்தேன். காதல் கொண்டேன் படத்திற்கு பிறகு நான் இரண்டு படங்களில் நடித்தேன். ஆனால், எல்லாம் ஒரே மாதிரியான கதாபாத்திரம்தான். அதற்கு பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

Advertisement

சினிமா வாய்ப்பு குறித்து சொன்னது:

அது மட்டும் இல்லாமல் திரை துறையிலும் எனக்கு எந்த ஒரு சப்போர்ட்டும் கிடைக்கவில்லை. சரியான வழிகாட்டியும் இல்லை. இப்போது இருக்கும் சோசியல் மீடியாக்கள் அப்போது இருந்திருந்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் நான் ஒரு நல்ல இடத்தை பிடித்திருப்பேன். எனக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. தமிழ் சினிமாவை ரொம்பவே நேசிக்கிறேன். அதனால் தான் 2007,2010,2014 ஆண்டுகளில் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தேன். எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது ஒரே ஒரு தமிழ் படத்தில் ஆவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதற்கு நான் கடவுளிடம் வேண்டுகிறேன். நிச்சயம் என்னுடைய ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன். தற்போது இந்தி படங்கள், சீரியல், வெப் சீரிஸ், விளம்பர படங்கள் என நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், என்னுடைய விருப்பம் தமிழில் நடிப்பது தான் என்று கூறியிருக்கிறார்.

Advertisement