தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் ஆர்.கே சுரேஷ். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தார். அதன் பிறகு தான் நடிகர் ஆர் கே சுரேஷ் அவர்கள் படங்களில் நடிக்க தொடங்கினார். முதலில் இவர் வில்லன் வேடத்தில் தான் மிரட்டி இருந்தார்.
பின் சமீப காலமாக இவர் படங்களில் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் காடுவெட்டி. மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் குருவாக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார்.
காடுவெட்டி படம்:
மேலும், இந்த படத்தில் சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்ரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை மஞ்சள் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம் ஜி.ராமு, சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து விட்டது.
கடந்த வாரம் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள திரையரங்கில் நடைபெற்றிருக்கிறது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இருந்தார்கள். அதோடு படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதோடு சென்சார் கொடுக்க கூடாது என்று எல்லாம் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். குறிப்பாக, காடுவெட்டி பெயருக்கு சென்சார் எதிர்ப்பு இருந்தார்கள்.
சென்சார் குறித்த சர்ச்சை:
அதேபோல் மன்னர்கள் காலத்தில் போர் பயிற்சி செய்ய காடுகளில் உள்ள மரங்களை வெட்டி சமம் செய்து அதில் பயிற்சி மேற்கொள்வார்கள். அதற்கு பிறகு தான் விளைநிலமாக மாற்றப்பட்டது. அந்த இடங்களை தான் காடுவெட்டி என்பார்கள். அப்படி தமிழ்நாட்டில் 11 இடங்கள் இருக்கிறது. காடுவெட்டி என்பது சரித்திரத்துடன் தொடர்புடைய பெயர். ஆகையால், காடுவெட்டி பெயருக்கு சென்சார் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.
படத்துக்கு கொடுத்த சென்சார்:
அதுமட்டும் இல்லாமல் படத்தில் வரும் சில வசனங்கள், காட்சிகளுக்கும் சென்சார் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இதனால் படத்தின் இயக்குனர் சோலை ஆறுமுகமும் சென்சாரில் இருந்து என்ன சொல்வார்களோ? என்று பயத்தில் இருந்தார். இந்த நிலையில் படத்தில் 31 இடங்களில் நிறைய கட் செய்து ஒரு வழியாக சென்சார் நிறுவனம் சான்றிதழ் வழங்கி இருக்கிறது. மேலும், சில அரசியல்வாதிகள் சொல்லும் நாடக காதல் பின்னணியில் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.