காக்கா முட்டை படத்துல வந்த சின்ன காக்கா முட்டையா இது ? எப்படி தான் இப்படி பொசுக்கு மாறிடறாங்கனு தெரியல.

0
1307
ramesh
- Advertisement -

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறனுடன் இணைந்து பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்து வெளியிட்ட, ‘காக்கா முட்டை’ படம் பெரும் வெற்றியைப் பெற்றுதுடன் பல்வேறு வசூல் சாதனைகளையும் செய்தது.எம்.மணிகண்டன் இயக்கிய இந்த படம் பல விருதுகளையும் அள்ளிக் குவித்தது. இந்த படத்தில் நடித்திருந்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.அத்தோடு இந்த படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் நல்ல புகழை ஏற்படுத்தி தந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தில் நடித்த சிறுவர்களான விக்னேஷ், ரமேஷ் குடும்பம் மற்றும் அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான உதவிகளை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் ஏற்றது. இந்த படத்தில் நடித்த பெரிய காக்க முட்டை விக்னேஷ் காக்கை முட்டை படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.அதே போல தற்போது ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் பெரிய காக்க முட்டை விக்னேஷின் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. அதை பார்த்த பலரும் பெரிய காக்கா முட்டையா இது என்று வியந்து போனார்கள். ஆனால், ஆனால், காக்க முட்டை படத்தில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டவர் சின்ன காக்க முட்டை தான். காக்க முட்டை படத்தில் சின்ன காக்க முட்டையாக நடித்த ரமேஷ் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிவில்லை.

சமீபத்தில் கூட நடிகை ஐஸ்வ்ர்யா ராஜேசுடன் ரமேஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியானது. இந்த நிலையில் சின்ன காக்கா முட்டை ரமேஷின் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் நீளமான முடியை குடுமி போட்டுகொண்டு அரும்பு மீசையுடன் ஆளே மாறியுள்ளார் சின்ன காக்கா முட்டை.

-விளம்பரம்-
Advertisement