3 நாட்களில் ரூ. 100 கோடி மெர்சல் வசூலை தகர்த்ததா காலா..? எத்தனை கோடி தெரியுமா..? விவரம் இதோ

0
1069
mersal-kaala

ரஜினி படம் என்றாலே பாக் ஆபிஸ் சாதனைகளை படைத்து விடும். அதிலும் குறிப்பாக படம் வெளியாகி 3 நாட்களில் படத்தின் வசூல் பல கோடிகளை தாண்டி விடும். ஆனால், சமீபத்தில் வெளியான ரஜினியின் காலா படம் அப்படிபட்ட சாதனையை படைக்கவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர்.

kaala

கடந்த வியாழக்கிழமை(ஜூன்7 ) வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், நடுநிலை ரசிகர்களிடம் இந்த படம் நல்ல விமர்சனத்தை பெறவில்லை என்பது தான் உண்மை. இந்தியாவை தவிர்த்து பல்வேறு நாடுகளில் வெளியான இந்த படத்தின் வசூல் எவ்வளவு என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

படம் வெளியாகி 3 நாட்கள் ஆன நிலையில் சென்னையில் மட்டும் இந்த படம் 4.90 கோடி ரூபாய் வசூலை செய்துள்ளது. இது ரஜினி படத்திற்கு மிக குறைவு என்று தான் கருதப்படுகிறது. சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘மெர்சல்’ 4.17 கோடி ரூபாயை வாசுல் செய்தது. உலகம் முழுவது உள்ள திரையரங்குகளில் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை செய்தது மெர்சல்.

Mersal

அதே போல ரஜினியின் காலா படமும் உலகளவில் தற்போது 3 நாட்களில் 100 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பல பேர் காலா படத்திற்கு எதிர்மறையான விமர்சங்களை முன்வைத்தும் இந்த படம் 100 கோடி கிளப்பில் இணைந்து, ரஜினிக்கு உள்ள மாஸை நிரூபித்துள்ளது.