தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் சிலம்பரசன், தனுஷ், அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் அதிகமாக பணியாற்றி இருக்கிறார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளர்கள். ஏற்கனவே 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த படம் நானும் ரவுடி தான். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை, அதிரடி, ஆக்ஷன், காதல் கலந்த படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து இருந்தார்கள்.
இந்த படத்தில் மாற்றுத்திறனாளியாக, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இதனாலேயே இந்த படத்தில் நயன்தாராவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் விஜய் சேதுபதி- விக்னேஷ் சிவன்- நயன்தாரா இணைந்து “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற படத்தில் பணிபுரிந்து உள்ளார்கள். இவர்களுடன் சமந்தாவும் இந்த படத்தில் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளது.
காத்துவாக்குல ரெண்டு காதல் படம்:
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி ராம்போ எனும் கதாபாத்திரத்திலும், சமந்தா காதீஜா எனும் கதாபாத்திரத்திலும், நயன்தாரா கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது டப்பிங், எடிட்டிங் என்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
விக்னேஷ் சிவன் வெளியிட்ட டைட்டானிக் டீஸர்:
அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் நடன இயக்குனர் கலா மாஸ்டர் நடிகையாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அந்த வகையில் போஸ்டரில் வளையோசை என்ற பாடலுக்கு கமலஹாசன், அமலா பால் நடித்திருப்பார்கள், அதையே விக்னேஷ் சிவன் ரி-கிரியேட் செய்து விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தாவை வைத்து போஸ்டர் உருவாக்கியிருந்தார்.
டைட்டானிக் போஸ் குறித்து நயன் கூறியது:
இது சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகிறது. இதனை தொடர்ந்து தற்போது டைட்டானிக் , பாகுபலி போஸ்டர் எல்லாம் வெளியாகி இருக்கிறது. நேற்று 22.02.2022 என்ற ஸ்பெசல் நாள் என்பதால் விக்னேஷ் சிவன் டைட்டானிக் டீசரை வெளியிட்டு இருந்தார். அதில் ஜாக்காக விஜய் சேதுபதி, ரோஸாக நயன்தாரா, சமந்தா ஆகிய மூவரும் கப்பல் மேல் நின்று போஸ் கொடுத்து இருக்கிறார்கள். இந்த டைட்டானிக் போஸ்டர் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த டீஸர் உருவாக்கும்போது எடுத்த மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
சமந்தாவின் பதிவு:
அதில் நயன்தாரா முதலில் நடந்து வருகிறார். அவரை பார்த்து அங்கு இருக்கிறவர்கள் சிரிக்கிறார்கள். உடனே நயன்தாரா, காமெடி பண்றீங்களா, என்னை வச்சு ஜாலியா இருக்கா உங்களுக்கு என்று சொல்கிறார். பின் நயன்தாராவைத் தொடர்ந்து சமந்தா ரோஸாக வருகிறார். சம்பந்தமும் வரும் போது சிரித்துக் கொண்டே வருகிறார். அதுமட்டும் இல்லாமல் எப்படி தான் இப்படி பண்ண நாங்க ஒத்துக்கிட்டோம்னு தெரியல என்று சமந்தாவும் வேடிக்கையாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ,புகைப்படம் எல்லாம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் ட்ரெண்டிங் ஆக்கிய வருகிறார்கள்.