எனக்கே இவனைப் புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் நயன் – கலங்கிய பார்கவ்வின் அம்மா.

0
1551
bargav
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Kaathuvaakula Rendu Kaadhal Review | காத்துவ வாக்குல 2 காதல்

பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் கடந்த வாரம் வெளியாகி இருந்தது. நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி- நயன்தாரா- விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகி இருக்கும் படம் காத்துவாக்குல 2 காதல். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி- ராம்போ, சமந்தா – கதீஜா, நயன்தாரா- கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

காத்துவாக்குல ரெண்டு காதல் படம்:

படத்தில் ராம்போ கதாபாத்திரத்தில் அதிஷ்டம் இல்லாதவராக விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். எது வேண்டும் என்று நினைத்தாலும் அது அவரை விட்டு செல்கிறது. இந்த நிலையில் இவருடைய வாழ்க்கையில் சமந்தா, நயன்தாரா இருவரும் வருகிறார்கள். இருவரையுமே விஜய் சேதுபதி காதலிக்கிறார். இறுதியில் இருவருமே விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லையா? விஜய்சேதுபதியின் வாழ்க்கையில் வேற என்ன மேஜிக் நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை. மேலும், பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் கதை:

இந்த படத்தில் நயன்தாராவின் தம்பியாக பார்கவ் என்ற ஸ்பெஷல் குழந்தை ஒருவர் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் பார்கவ் தன் அம்மாவுடன் சேர்ந்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர்கள் படத்தின் அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த படத்தில் என்னுடைய மகன் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. படம் பார்க்கும்போது ரொம்ப எக்சைட்மென்ட் ஆக இருந்தேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வாட்ஸ்அப் மூலமாக தான் வந்தது.

-விளம்பரம்-

பார்கவ் அம்மா அளித்த பேட்டி:

அதாவது வாட்ஸ் அப்பில் இந்த படத்தில் நடிப்பதற்காக ஸ்பெஷல் குழந்தை வேண்டும் என்றும் ஒன்பதிலிருந்து பத்து வயது இருக்கிற ஆண் குழந்தை வேண்டும் என்றும் தகவல் வந்திருந்தது. ஆரம்பத்தில் நடிக்க வைக்கலாமா? வேண்டாமா? என்று குழப்பத்தில் இருந்தேன். ஏனென்றால், இவனை புரிந்து கொள்வது எளிது அல்ல. எனக்கே இவனைப் புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் ஆரம்பத்தில் தயங்கினேன். பின் முயற்சியோடு ஆடிசனுக்கு சென்று இருந்தேன். அப்போது இவனைப் பார்த்த நயந்தாரா நடிக்கலாம் என்று சொல்லிவிட்டார்.

நயன்-பார்கவ் குறித்து கூறியது:

அதுமட்டுமில்லாமல் இவனை நான் எந்த அளவுக்கு முழு கவனத்தோடு பார்த்துக் கொள்வேனோ, அதே அளவுக்கு மேடமும் இவனை நன்றாக பார்த்துக் கொண்டார். சூட்டிங்கில் இவனுடைய மைண்ட் செட் பொறுத்து தான் ஷூட்டிங்கும் நடத்துவார்கள். ஒருசில சீன்களில் மட்டும் தான் இவன் தனியாக இருப்பான். மீதி எல்லாமே நயன் மேடம் உடன் தான் இருப்பான். இவனும் நயனும் சேர்ந்து நிறைய போட்டோக்கள் எடுத்து இருக்கிறார்கள். அந்த அளவிற்கு நயன் மேடம் இவன் உடன் குளோஸ் ஆகிவிட்டார். பார்கவ் வெளியாட்கள் யாரிடமும் இவ்வளவு நெருக்கமாக பழகியதே இல்லை. ஆனால், விஜய் சேதுபதி,நயன், விக்கி உடன் அதிகமாக க்ளோஸ் ஆகி விட்டான் என்று பல விஷயங்களை கூறி இருக்கிறார்.

Advertisement