காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகையின் கவர்ச்சி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் தொடர்களில் ஒன்று தான் காற்றுக்கென்ன வேலி சீரியல். இந்த சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
தற்போது இந்த தொடர் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர் ஆக மாறி இருக்கிறது. இந்த தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வருகின்றார். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வெண்ணிலாவுக்கு அவருடைய அப்பா கல்யாண ஏற்பாடு செய்கிறார். ஆனால், வெண்ணிலா கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நனவாக்க போராடுகிறார். பின் வெண்ணிலாவுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வருகிறது.
காற்றுக்கென்ன வேலி சீரியல்:
இருந்தும் ஹீரோ சூர்யா தான் வெண்ணிலாவுக்கு உறு துணையாக நிற்கிறார். பின் இருவருக்கும் காதல் மலர்கிறது. பல போராட்டங்களுக்கு பிறகு இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருக்கிறார்கள். ஆனால், திருமணம் நின்று விடுகிறது. பின் பல போராட்டங்களுக்கு பிறகு அனைவரும் எதிர்பார்த்தபடி சூர்யா- வெண்ணிலா இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. எப்படியோ இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
ஆனால், இவர்களை வீட்டில் சேர்க்க முடியாது என்று சூர்யாவின் பெரியம்மா வெளியே அனுப்பி விடுகிறார். அப்போது வெண்ணிலா இதை விட நாங்கள் வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு வந்து வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டு அங்கிருந்து கிளம்புகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த சீரியலில் சூர்யாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜோதி ராய். தற்போது இவர் இந்த சீரியலை விட்டு விலகி விட்டார்.
இன்ஸ்டா புகைப்படங்கள் :
இவர் சீரியலில் விலகியகாரணம் என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் இவரை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. இவர் நிறைய கன்னட மற்றும் துளு படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் Varnapatala. அதோடு இவர் சின்னத்திரையில் சீரியலில் நடித்தும் வருகிறார். தற்போது இவர் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் எப்போதும் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார்.
வைரலாகும் புகைப்படங்கள் :
தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது. காற்றுக்குவென்ன வேலி சீரியலில் அம்மா என்ற கதாபாத்திரத்தில் குடும்ப பெண்ணாக நடித்திருந்த ஜோதி ராய் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் எல்லாம் பயங்கர கிளாமராக இருக்கிறது. படு கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த பலருமே இவர் சூர்யா அம்மாவாக நடித்தவரா! என்று வாயைப் பிளந்து புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.