24 வயசுதான் ஆகுது, திடீர்னு இப்படி ஒரு முடிவ எடுத்துட்டான் – ஹரியின் இறப்பு குறித்து புலி.

0
945
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “காற்றுக்கென்ன வேலி” சிரியலில் கதாநாயகி வெணிலாவின் காலேஜ் நண்பராக தமிழ் என்ற கதாபாத்திரத்தில் கானா பாடகர் ஹரி நடித்திருப்பார். இவர் பல நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து சீரியலில் பாண்டியன் திருமணத்தன் போது பாடப்பட்ட பாடல் கூட இவர் பாடியதுதான். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவுக்கு அவருடய சக நடிகர்கள் ஆறுதல் கூறிவரும் நிலையில் காற்றுக்கென்ன வேலி சீரியலின் முக்கியமான கதாபாத்தில் நடித்து வரும் ராகவேந்திரா ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

-விளம்பரம்-

ராகவேந்திரா பேட்டி :

அந்த பேட்டியில் ராகவேந்திரா கூறுகையில் ” நான் ஹரியை சொந்த தம்பியாகத்தான் அவனை பார்த்தேன். நான் பலரிடம் நெருக்கமாக இருக்க மாட்டேன் ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நனையும் ஹரியும் அதிகமாக பகிர்ந்து கொள்வோம். நன்றாக பேசுவான் தீரென அமைதியாகிவிடுவான். ஹரி நன்றாக கானா பாடலை படக்கூடியவன், படப்பிடிப்பு தளத்தில் அப்போதே பாடல்கள் எழுத்து அடுத்த நொடியே பாடுவான். வாழ்க்கையை பற்றி அதிகமாக யோசித்துக்கொண்டே இருப்பான். அவன் இப்படடி மறைந்து வருத்தமாக இருக்கிறது.

- Advertisement -

கோபம் வருகிறது :

24 வயதுதான் ஆகும் நிலையில் இப்படி ஒரு முடிவு எடுத்த அவன் மீது முதலில் கோபம் தான் வருகிறது. காற்றுக்கென்ன வேலி மற்றும் தவமாய் தவமிருந்து என இரண்டு கதைகளின் நடித்துக் கொண்டிருந்தான். ஏதோ மனஅலுதத்திற்கு உள்ளாகி இருக்கிறான், அவனிடம் நான் பலமுறை உன்னுடைய பாடலை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் போடு என்று கூறியிருக்கிறேன். ஆனால் இப்படி தற்கொலை செய்து கொண்டான். ஹரியின் குடும்பத்தை பார்க்கவே மிகவும் வருத்தமாக இருந்தது. சினிமா மட்டுமே வாய்ப்பு கிடையாது. நீ பாடுகிறாய் உனக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. என்று நான் அடிக்கடி கூறுவேன் ஆனால் இப்படி அனைவரையும் ஏமாற்றி விட்டு சென்று விட்டான் என்று அழுதபடி கூறினார் ராகவேந்திரா.

எழுத்தாளர் தீபா ஜானகிராமன் :

இவரை தொடர்ந்து எழுத்தாளர் தீபா ஜானகிராமன் என்பவரும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஹாரி பற்றி பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் “நான் பணி செய்த ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு ஹரி வந்திருந்தார். அன்றைய தினம் ஆடிஷன் நடந்து கொண்டிருந்தது. ஹரியின் முறை வரும்போது தனக்கு நன்றாகப் பாட வருமென்று அடுத்தடுத்து கானா பாடல்களாகப் பாடிக்கொண்டே இருந்தார். மேஜையைத் தட்டியபடி இரண்டு பாடல்கள். நின்று கொண்டு ஒரு பாடல். ஆடிக்கொண்டே இரண்டு பாடல்கள் என. நிறுத்தத் தோன்றவில்லை. அவருக்காகவே ஒரு கதாபாத்திரத்தை அந்த சீரியலில் உருவாக்கினோம். நன்றாக நடித்தார். அந்தக் கதாபாத்திரம் அடிக்கடி கானா பாடல்களை பாடுகிற வகையில் அமைத்திருந்தோம்.

-விளம்பரம்-

பாட சொல்லிக்கொடுத்தார் :

அதற்கென ரசிகர் வட்டம் உருவானது. அந்த சீரியலுக்கு திரைக்கதை வசனம் நான் எழுதியதால், முதலிலேயே ஹரியை அழைத்து இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டு வேண்டும் ஹரி. ரெடி பண்ணிக்கோங்க என்றால் பதினைந்தாவது நிமிடம் “நல்லாருக்கான்னு சொல்லுங்க மேடம்” என்று வாட்ஸ் ஆப்பில் பாடல் வரும். அவரே பாடல்வரிகளை எழுதி மெட்டும் போட்டுவிடுவார். மாதமொரு முறை என்னை வந்து சந்தித்துக் கொண்டிருந்தார். அவர் எனக்கு பாடச் சொல்லிக் கொடுத்து நான் பாடிய கானா வீடியோ ஒன்று அவரிடத்தில் உண்டு. “உங்க ஞாபகமா நான் வச்சிக்கறேன்” என்று போனில் வைத்துக் கொண்டிருப்பார்.

ஹரியின் ஆசை :

எனக்கு இன்ஸ்டாக்ராம் அக்கவுன்ட் ஆரம்பித்து அதன் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். “நீங்க பாடினதை இன்ஸ்டால போட்டு விடட்டுமா?” என்று கேட்டு அடிக்கடி சிரித்துக்கொண்டே ப்ளாக்மெயில் செய்வார். சில நாட்களாக தொடர்பில் இல்லை. ஒருநாள் நான் அழைத்திருந்தேன். “வாய்ப்பு இல்ல மேடம். உங்க முன்னாடி ஜெயிச்சிட்டு வரணும்னு ஆசை. நீங்க படம் பண்ணா. எனக்கு நடிக்க வாய்ப்பு குடுங்க. அதுக்குள்ள ஜெயிச்சிடுவேன் ” என்றார். சில இடங்களில் வாய்ப்புக்காக சொல்லியிருந்தேன். அவரது நண்பர்களும் தேடிக்கொண்டிருந்தார்கள். அவசரப்பட்டுவிட்டார்.

ஒரு போன் காலில் அனைத்தும் மாறிவிடும் :

நண்பர்களிடம் நேற்றைய தினம் பேசியிருக்கிறார். அவர் பேசிய நண்பர்களும் இதைச் சொன்னார்கள். “நல்லாத் தான பேசினான்” என்று தான் எல்லோருமே சொல்கிறார்கள். சினிமாவுக்கும் சீரியலுக்கும் எப்போதுமே தேவைப்படுவது உழைப்பு, திறமை, விடா முயற்சி மட்டுமல்ல மிக முக்கியமாய் பொறுமை. வாய்ப்புக் கேட்பவர்களிடம் சொல்வேன், “ஒரு போன் கால்ல ஒருத்தருக்கு எல்லாமே மாறிடும். அது தான் சினிமாவோட மேஜிக். அந்த போன் கால் எப்ப வேணாலும் வரும்..” என்பேன். ஹரிக்கும் சொல்லியிருக்கிறேன். ஒன்றும் சொல்வதற்கில்லை. அவரவர் மனதின் பாரம் அவரவர்க்கு.

Advertisement