அதில் எனக்கு உடன்பாடு இல்லை, அதனால் – காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலக காரணம் என்ன ? தர்ஷன் கொடுத்த ஷாக்

0
53739
Darshan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமாகி வரும் தொடர்களில் ஒன்று தான் காற்றுக்கென்ன வேலி சீரியல். இந்த சீரியல் சமீபத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது இந்த தொடர் ரசிகர்கள் விரும்பி வரும் தொடர் ஆக மாறியுள்ளது. இந்த தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா குமார் மற்றும் சூர்யா கதாபாத்திரத்தில் சூர்யா தர்ஷன் நடித்து வருகின்றனர். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வெண்ணிலாவுக்கு அவருடைய அப்பா கல்யாண ஏற்பாடு செய்கிறார். ஆனால், வெண்ணிலா கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நனவாக்க போராடுகிறார்.

-விளம்பரம்-

வெண்ணிலாவுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வருகிறது. இருந்தும் சூர்யா வெண்ணிலாவுக்கு உறுதுணையாக நிற்கிறார். இதுதான் இந்த சீரியலின் கதை களம். மேலும், பல விறுவிறுப்புடன் இந்த சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் இருந்து கதாநாயகன் விலகியுள்ளார். தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து வீடியோ ஒன்றை சூர்யா தர்சன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல. நிறைய பேர் இந்த சீரியலில் இருந்து விலகுவது குறித்து மெசேஜ் போட்டு இருந்தார்கள். என்னுடைய இன்னொரு பிராஜக்ட்க்கும் காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கும் நேரம் ஒதுக்குவதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கு.

- Advertisement -

அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. எதையுமே என்னால் மேனேஜ் பண்ண முடியல. இதனால் காற்றுக்கு என்ன வேலி டீமுக்கும் எனக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் சீரியலில் என்னுடைய லுக்கில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. இதனால் தான் நான் சீரியல் இருந்து விலகி உள்ளேன். என் மீது இவ்வளவு அக்கறை உடன், பாசத்துடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி. எல்லோருடைய ஆதரவும் எனக்கு தேவை. இதேபோல் எல்லோரும் எனக்கு சப்போர்ட் பண்ணுங்கள் என்று கூறி இருந்தார்.

இப்படி இவர் பதிவிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து சூர்யாவின் அம்மாவாக சாரதா கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா அவினாஷ் விலகியிருந்தார். இது குறித்து ரசிகர்கள் பலவிதமாக ஏன் விலகினார்கள் என்று கேள்வி கேட்டு வந்தார்கள். இந்தநிலையில் கதாநாயகனை சீரியலில் இருந்து மாற்றப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. மேலும், இந்த சீரியல் இனிமேல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement