விஜய் அவார்ட்ஸ் கிடைக்காததற்கு இது தான் காரணம்- காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகையின் ஆதங்கம்.

0
674
- Advertisement -

விஜய் அவார்ட்ஸில் காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கு ஒரு விருது கூட கிடைக்காததற்கான காரணம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. பொதுவாக விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களும் சரி, விருது விழாக்களும் சரி சர்ச்சையில் சிக்காமல் இருந்தது கிடையாது. சூப்பர் சிங்கர், ஜோடி, பிக் பாஸ் போன்ற பல நிகழ்ச்சிகளில் தகுதியான நபர்களுக்கு வெற்றி சென்று அடைந்தது இல்லை என்ற சர்ச்சை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் விருதுகள் நிகழ்ச்சியில் தகுதியான சீரியல்களுக்கும் தகுதியான நடிகர்களுக்கும் விருதுகள் கிடைக்கப்பெறவில்லை என்ற புதிய சர்ச்சை தற்போது எழுந்து இருக்கிறது.

-விளம்பரம்-

வருடம் வருடம் விஜய் டிவியில் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு சில நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவறவிட்டாலும் , அனைத்து தரப்பு கவர கவரும் ஒரு நிகழ்ச்சி தான் விஜய் அவார்ட்ஸ். ஆண்டு தோறும் விஜய் டிவியில் நடந்து வரும் இந்த விழா 13 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கலைத்துறையில் சாதித்த சிறந்த நடிகர்கள் , நடிகைகள், இசையமைப்பாளர்கள் என்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டு சினிமா துறை கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அதே விஜய் அவார்ட்ஸ் போலவே விஜய் டிவியில் பணியாற்றி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

விஜய் டெலிவிஷன் விருதுகள் 2022 :

இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் என்று பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. ஆனால், இந்த விழாவில் ரசிகர்களின் அபிபாமான பல சீரியல்களுக்கும் மக்கள் மனதை கவர்ந்த நடிகர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவில்லை என்பதே தொலைக்காட்சி ரசிகர்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் டாப் சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை.

This image has an empty alt attribute; its file name is image-33.png

புறக்கணிக்கப்பட்ட சீரியல் :

இந்த வருடம் பெஸ்ட் சீரியல் என்ற விருதை பாக்கியலட்சுமி தொடர் தட்டிச் செல்கிறது. fav on-screen fair என்ற விருதை தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஜோடி நட்சத்திரா மற்றும் வெங்கட் பெறுகின்றனர். மேலும், பெஸ்ட் குடும்பம் என்ற விருதை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கிடைக்கிறது. ஆனால், விஜய் டிவியில் பல ரசிகர்களை கவர்ந்த காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அந்த சீரியலில் நடித்து வரும் நடிகை ஷியாமலா பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், வெளியிலிருந்து பார்த்தவரைக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியல் தான் மிகச்சிறந்தது. பிறகு ஏன் இந்த பாரபட்சமான நடுவர் மன்றம்? மற்ற சீரியல்களை விளம்பரம் செய்யும் போது ஏன் காற்றுக்கு என்ன வேலி சீரியலுக்கு மட்டும் விளம்பரம் படுத்தவில்லை.

-விளம்பரம்-

நடிகை ஷியாமளா அளித்த பேட்டி:

எந்த நிகழ்ச்சியிலுமே காற்றுக்கு என்ன வேலி சீரியலை பங்கேற்க விடுவதில்லை? எங்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும், நாங்கள் தகுதியானவர்கள். விருது விழாவில் எங்களின் சீரியல் போஸ்டர்கள் கூட இல்லை. நாங்கள் கடைசியில் அமர்த்தப்பட்டோம் என்று தன்னுடைய ஆதங்கத்தை கூறி இருந்தார். இந்நிலையில் விஜய் அவார்ட்ஸில் காற்றுக்கென்ன வேலி சீரியலுக்கு எந்த ஒரு விருதும் கிடைக்காத காரணத்தை குறித்து நடிகை ஷியாமளா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், நான் எந்த சீரியலும் பார்த்தது கிடையாது. காற்றுக்கென்ன வேலி சீரியல் மட்டும்தான் பார்ப்பேன். இதுவரை நடந்த எல்லா விருது விழாவையும் பார்த்திருக்கிறேன்.

விஜய் அவார்ட்ஸ் கிடைக்காத காரணம்:

ஆனால், எதற்கும் காற்றுக்கென்ன வேலி சீரியலை கூப்பிட்டது இல்லை. ரியாலிட்டி ஷோக்களில் கூட எங்களை கூப்பிடுவது கிடையாது. நாங்கள் பர்பாமன்ஸ் பண்ண மாட்டோமா?தகுதி இல்லையா? எங்களால் முடியும். வாய்ப்பு கொடுங்கள். நான் இந்த பதிவு போட்ட பிறகு தான் காற்றுக்கென்ன வேலி சீரியலை பிரமோட் பண்ணுகிறார்கள். சீரியலின் டிஆர்பினால் தான் எங்க சீரியலுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஏன்னா, இப்போ எல்லோரும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். அதனால் மதியம் ஒளிபரப்பாகும் எங்க சீரியலை பலராலும் பார்க்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஹாட்ஸ்டாரில் பார்க்கிறார்கள். இதில் பார்த்தால் டிஆர்பி வராது. அதனால் தான் விஜய் அவார்ட்சில் எங்களுடைய சீரியலுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறி இருக்கிறார்

Advertisement