காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகைக்கு அடித்து இருக்கும் ஜாக்பாட் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து இருந்தவர் வெண்ணிலா. இவரது நிஜப் பெயர் பிரியங்கா குமார். இவர் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார். இவருக்கு நடிப்பு மீது அதிக ஆர்வம் இருந்ததால் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தனது 15 வயதில் மாடலிங் செய்ய ஆரம்பித்தார்.

பின் பல விளம்பரங்களில் நடித்து இருந்தார். அதன் பிறகு மைசூரில் உள்ள வித்யாஷ்ரம் கல்லூரியில் பிபிஏ படித்தார். 2016-ல் நடந்த ‘மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ போட்டியில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றார். இந்த பிரபலத்தினால் தான் ப்ரியங்காவிற்கு கன்னட சின்னத்திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நடித்து இருந்தார்.
காற்றுக்கென்ன வேலி சீரியல்:
இந்த தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து இருந்தார். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வெண்ணிலாவுக்கு அவருடைய அப்பா கல்யாண ஏற்பாடு செய்தார். ஆனால், வெண்ணிலா கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நனவாக்க போராடுகிறார். பின் வெண்ணிலாவுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வருகிறது. இருந்தும் ஹீரோ சூர்யா தான் வெண்ணிலாவுக்கு உறு துணையாக நிற்கிறார்.

சீரியல் கதை:
பின் இருவருக்கும் காதல் மலர்கிறது. பல போராட்டங்களுக்கு பிறகு இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருக்கிறார்கள். ஆனால், சூர்யா பெரியம்மா செய்த சதியால் இவர்கள் திருமணம் நின்று விடுகிறது. அதற்கு பின் என்ன நடந்தது என்பது தான் சீரியல் கதை. இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் முடிவடைந்தத.

பிரியங்கா குறித்த தகவல்:
மேலும், இந்தத் தொடரின் மூலம் பிரியங்கா தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இதற்குப் பின் இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இவர் நிறைய போட்டோ ஷூட் தான் நடத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட இவருடைய கிளாமரான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகியிருந்தது.
View this post on Instagram
பிரியங்கா நடிக்கும் புது படம்:
இந்த நிலையில் நடிகை பிரியங்கா புது படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இது தொடர்பாக அவரே இன்ஸ்டாவில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் இவர் கன்னட மொழியில் தூர தீர யான என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய போஸ்டர் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் பிரியங்காவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






