கபாலி படத்தின் முக்கிய கதாபாத்திரம் ! பிக் பாஸ் வீட்டிற்குள் !

0
1042
kamal

இன்று (ஜூன் 17 ) நடக்கவிருக்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும், போட்டியாளர்கள் மத்தியில் பிரபலத்தையும் ஏற்படுத்தியது.

ritvika

பிக் பாஸ் சீசன் 1- ன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் இன்று (ஜூன் 17) தொடங்கிவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் 16 போட்டியாளர்களை தேர்வு செய்து, அவர்கள் ஒருவர் பின் ஒருவராக நேற்று பிக் பாஸ் வீட்டினுள் அனுப்பப்பட்டு வந்தனர்.

Rithvika

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த நடிகை ரித்விகா இந்த நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். சென்னையை சேர்ந்த நடிகை ரித்விகா ‘மெட்ராஸ் ‘ படத்தில் நடிகர் கலையரசனிற்கு மனைவியாக நடித்திருப்பார்.

ritvika

மெட்ராஸ் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடித்த ‘கபாலி’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அந்த படத்திற்கு பின் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.