கூச்சமா இருக்கு..! கைல காசு இல்ல..! கபாலீஸ்வரர் கோயில் அன்னதானம்தான் நம்ம மீல்ஸ்

0
424
Anirudh-

30 வயசுக்குள்ள இசையமைப்பாளரா ஆகணும் என்பதுதான் என் லட்சியம். அப்ப நான் நல்லாவும் படிப்பேன். எங்க அப்பா ஒரு பேங்கர். எனக்கு சிங்கப்பூர்ல ஒரு நல்ல ஃபினான்ஸ் கோர்ஸ் கிடைச்சது. அப்ப நான் எடுத்த முடிவுதான் இன்றைய என் நிலைக்குக் காரணம். ‘இங்கேயே ஒரு டிகிரி பண்றேன். அந்த மூணு வருஷத்துல மியூசிக்ல ஏதாவது கிடைச்சிடுச்சுன்னா. இங்கேயே செட்டிலாகிடுறேன். இல்லைனா நீங்க சொல்றபடி ஃபாரின் போறேன்’னு சொன்னேன். அவரும் ஒப்புக்கிட்டார். பிறகு லயோலா காலேஜ்ல சேர்ந்தேன்.

anirudh

இதுக்கு முன் அரவிந்த்னு என் நெருங்கிய நண்பன், ஸ்கூல்ல இருந்து ஃப்ரெண்ட். ‘மச்சான் நான் ஒருநாள் மியூசிக் டைரக்டராகிடுவேன். நீ போய் சவுண்ட் இன்ஜினீயர் படிச்சிட்டுவா’னு சொன்னேன். அவனும் டெல்லி போய் சவுண்ட் இன்ஜினீயரிங் கத்துக்கிட்டு இருந்தான். அந்த சமயத்துல காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல ‘3’க்கு முன் ஒரு படம்ல கமிட் ஆனேன். ‘எனக்கு படம் கிடைச்சிடுச்சு. வாடா மச்சான்’னு அரவிந்தை கூப்பிட்டேன். அவனும் வந்தான். ஆறேழு மாசம் பரபரப்பா ஒர்க் பண்ணி ஆறு பாடல்கள் முடிச்சோம். ஆனால், திடீர்னு அந்தப் படத்தை அப்படியே கிடப்புல போட்டுட்டாங்க. வீட்ல விஷயத்தைச் சொன்னேன். ‘ஒண்ணும் பிரச்னையில்லை. டிகிரியை இங்க முடி. ஃபாரின்ல போஸ்ட் கிராஜுவேஷன் முடிச்சு இன்வெஸ்மென்ட் பேங்கராகிடலாம்’னாங்க.

ஸ்கூல் நாள்ல இருந்தே என் டீமுடன் கல்யாண கச்சேரிகள் வாசிச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன். அதனால வீட்ல பாக்கெட் மணி வாங்கினதே கிடையாது- ஆனால் காலேஜ் முதல் வருஷத்துல ‘படம் பண்றேன்’னு பேண்ட்ல வாசிக்கிறதையும் விட்டுட்டேன். இதனால காசுக்கும் வழி இல்லை. வீட்ல கேட்கவும் கூச்சமா இருக்கும். வெளியில சுத்திட்டு பசிக்கும்போது கபாலீஸ்வரர் கோயில் போய் அன்னதானம் வாங்கி சாப்பிட்டு சமாளிச்சதும் உண்டு. காலேஜ் இரண்டாவது வருஷத்துலதான் ‘3’ படத்துல கமிட் ஆனேன். ‘கத்தி’ படம் பண்ணும்போது அரவிந்த் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டான்.

இப்பயும் ஏதாவது ட்யூன் வரலைனா… என் கீபோர்ட் மேல இருக்கிற அவனோட போட்டோவைப் பார்ப்பேன். ‘உன்னால முடியும்டா மச்சான்’னு அவன் என்னை அடுத்தகட்டம் நோக்கி தள்ளுறமாதிரியே இருக்கும். மத்தவங்க நலன்ல அக்கறையுள்ள அவனைமாதிரியான ஆட்கள் கிடைக்கிறது ரொம்பவே அரிது.

Anirudh

இப்ப யோசிச்சுப்பார்த்தா, நான் அந்த பிசினஸ் கோர்ஸை தவிர்த்ததும், முதல் படம் ஒர்க் பண்ணி நின்னுபோனப்ப அரவிந்த் என்கூட இருந்தும்தான் என். லைஃப் சேஞ்சிங் மொமன்ட்னு சொல்லத்தோணுது. அதையெல்லாம் இப்ப யோசிச்சா, ‘நீ கெத்துதான்’னு தோணுது. இதை தலைகணத்துல சொல்லலை; தன்னம்பிக்கையில் சொல்றேன்.”