தற்கொலை குறித்த விழிப்புணர்வு கட்டுரை- கபிலன் மகளின் 2 ஆண்டுகளுக்கு முந்தைய பதிவு வைரல்

0
530
kabilan
- Advertisement -

கபிலனின் மகள் தூரிகை இரண்டு ஆண்களுக்கு முன்பே பேஸ்புக்கில் தற்கொலை குறித்து விழிப்புணர்வு பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமா உலகில் மிக பிரபலமான பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார் கபிலன். இவர் புதுச்சேரியில் பிறந்தவர். விக்ரம் நடித்த தில் என்ற படத்தில் உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா! என்ற பாடலை எழுதி தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் கபிலன். அதன் பின்பு இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார்.

-விளம்பரம்-

கபிலன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறார். இவருடைய பாடல்கள் எல்லாமே பட்டி தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. மேலும், இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விஷால் சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். இந்நிலையில் கவிஞர் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கபிலன் அவர்கள் சென்னை அரும்பாக்கம் எம் எம் டி ஏ பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

- Advertisement -

தூரிகை குறித்த தகவல்:

இவருடைய மகள் தான் தூரிகை. இவர் ஆடை வடிவமைப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார். மேலும், இவர் ‘Being Women Magazine’ எனும் இதழையும், ‘The Label Keera’ எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் நடத்தி வந்து இருக்கிறார். இவர் எப்போதும் பெண்கள் குறித்து பாசிட்டிவான கருத்துக்களையே தன்னுடைய நாளிதழில் வெளியிட்டு வருவார். அதுமட்டுமில்லாமல் பெண்களை கொண்டாடுவதற்காக தான் இவர் பத்திரிகையை தொடங்கியிருந்ததாகவும் கூறி இருக்கிறார்.

தூரிகை தற்கொலை:

இப்படி ஒரு சூழ்நிலையில் இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் மீட்கப்பட்டிருக்கிறது. தற்போது தூரிகையின் உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. தூரிகையின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தான் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

-விளம்பரம்-

தற்கொலை குறித்த விழிப்புணர்வு கட்டுரை:

இதனை அடுத்து போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இளம் வயதில் தூரிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தூரிகையின் தற்கொலை குறித்த விழிப்புணர்வு கட்டுரை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு தூரிகை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தற்கொலைக்கு எதிரான ஒரு விழிப்புணர்வு கட்டுரையை பதிவு செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடையாது.

தற்கொலை குறித்து சொன்னது:

உங்களுடைய தற்கொலையால் யாரும் எதையும் இழக்க மாட்டார்கள். ஆனால், நாம் நம் வாழ்க்கை, சிரிப்பு, இன்பம், அனுபவங்கள், சிறு சிறு சந்தோஷங்கள் என்று வாழ்க்கையை முழுவதுமாக இழக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். இறந்த பின்பு சமூக ஊடகங்களில் நம்முடைய இறப்பை ஒரு கதையாக தான் வெளியிடுவார்கள். ஓரிரு நாட்கள் சோகமாக இருப்பார்கள். ஆனால், பெற்றோரின் வலி மற்றும் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பை! அந்த வலி ஈடு செய்ய முடியாது. உறவுகள் எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதை அவர்களை நினைக்கக்கூடிய நாட்களில் நீடிக்கும். அது ஒரு வருடம் அல்லது 5 அல்லது 10 வரை இருக்கலாம். அதற்குப் பிறகு அவர்கள் தங்களுடைய வழக்கமான பணிக்கு திரும்பி விடுவார்கள்.

பெண்கள் குறித்து சொன்னது:

உங்கள் சொந்த அழகையும், புன்னகையும், வாழ்க்கையும் அனுபவிக்க தவறுகிறீர்கள். இதுதான் தற்கொலைக்கு பின்னால் உள்ள கசப்பான உண்மை. அன்பான பெண்களே! ஒரு பெண்ணாக இருப்பதால் அனைத்து அசாதாரணங்கள் உங்கள் வாழ்க்கையில் அன்பு செலுத்தி வலுவாக இருக்க வேண்டும்! பெண்கள் வலுவாக இருங்கள், வலுவாக மேம்படுத்துங்கள் என்று தூரிகை பதிவு செய்திருந்தார். இப்படி தற்கொலை குறித்து விழிப்புணர்வு பதிவு செய்த தூரிகையே தற்கொலை முடிவு எடுத்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement