கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட மகள் குறித்து அவரின் பிறந்தநாளில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். சினிமா உலகில் மிக பிரபலமான பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார் கபிலன். இவர் புதுச்சேரியில் பிறந்தவர். விக்ரம் நடித்த தில் என்ற படத்தில் உன் சமையலறையில் நான் உப்பா சக்கரையா! என்ற பாடலை எழுதி தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் கபிலன்.அதன் பின்பு இவர் ஆள்தோட்ட பூபதி, அர்ஜுனரு வில்லு, மச்சான் பேரு மதுர, ஆடுங்கடா என்ன சுத்தி, மெர்சல் ஆயிட்டேன், என்னோடு நீ இருந்தால் போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார்.
அதன் பின்பு இவர் ஆள்தோட்ட பூபதி, அர்ஜுனரு வில்லு, மச்சான் பேரு மதுர, ஆடுங்கடா என்ன சுத்தி, மெர்சல் ஆயிட்டேன், என்னோடு நீ இருந்தால் போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார். இப்படி சினிமா திரை உலகில் கபிலன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறார். இவருடைய பாடல்கள் எல்லாமே பட்டி தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.
கபிலன் மகள் தூரிகை :
மேலும், இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விஷால் சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கமலஹாசனின் தசாவதாரம் படத்திலும் கபிலன் நடித்திருக்கிறார். இந்நிலையில் கவிஞர் கபிலனின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தூரிகை செய்து வந்த வேலை :
கபிலன் அவர்கள் சென்னை அரும்பாக்கம் எம் எம் டி ஏ பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் தூரிகை. இவர் ஆடை வடிவமைப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார். மேலும், இவர் ‘Being Women Magazine’ எனும் இதழையும், ‘The Label Keera’ எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் நடத்தி வந்து இருக்கிறார்.
தூக்கிட்டு தற்கொலை :
அதோடு இவர் பல்வேறு திரைப்படங்களில் அடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் எப்போதும் பெண்கள் குறித்து பாசிட்டிவான கருத்துக்களையே தன்னுடைய நாளிதழில் வெளியிட்டு வந்தார். அதுமட்டுமில்லாமல் பெண்களை கொண்டாடுவதற்காக தான் இவர் பத்திரிகையை தொடங்கியிருந்ததாகவும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கபிலனின் உருக்கமான பதிவு :
தூரிகையின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தான் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இன்று மறைந்த தனது மகளின் பிறந்தநாளில் பதிவு ஒன்றை போட்டிருக்கும் கபிலன் ‘மகள் தூரிகைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.