கடைக்குட்டி சிங்கம் கார்த்திக் அக்கா தீபாவுக்கு இவ்ளோ பெரிய

0
395

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி “சரவணன் மீனாட்சி” என்ற தொடர் மூன்று சீசன்களை கடந்து சென்றுள்ளது. இதில் சரவணன்கள் மாறினாலும் மீனாட்சியாக நடிகை ரட்சிதா தான் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் பழனியம்மாள் என்ற கதாபாத்திரமும் இந்த தொடரை பார்த்து வரும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.

1

இந்த தொடரில் பழனியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் முதல் சீசனில் வில்லி கதாபாத்திரத்திலும் மூன்றாவது சீசனில் காமெடி கதாபாத்திரத்திலும் அசதி வருபவர் நடிகை தீபா. சீரியலில் நடித்து வரும் இவர் சினிமாவிலும் பல குணசித்ர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான கார்த்திக்கின் “கடைக்குட்டி சிங்கம் ” படத்தில் கார்த்திக்கின் சகோதரிகளில் ஒருவராகவும் நடித்திருந்தார். சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் நடிகை தீபா தனது இரண்டு மகன்களுடன் வந்திருந்தார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

கடைக்குட்டி படத்தில் வேலுநாச்சியார் ராணி என்ற கத்பாத்திரத்தில் நடித்துள்ள இவர், ஏற்கனவே தமிழில் ‘மாயாண்டி குடும்பத்தார்’ ‘வெடிகுண்டு முருகேசன் ‘ போன்ற பல படங்களில் குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.