கடைக்குட்டி சிங்கம் படத்தில் இந்த பாட்டி இந்த பிரபல விஜய் பட நடிகையின் பாட்டி தானா

0
562
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம் கடைக்குட்டி சிங்கம். இந்த படத்தில் சாயிஷா, பிரியா பவானி சங்கர், யுவராணி, அர்த்தனா பின்னு, விஜி சந்திரசேகர், சத்யராஜ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. மேலும், இந்த படத்தில் கார்த்தியின் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சரோஜா. இவர் பிரபல நடிகையின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வேற யாரும் இல்லைங்க, கீர்த்தி சுரேஷ் தான். இவருடைய பாட்டி தான் சரோஜா. இவர் கடைக்குட்டி சிங்கம் மட்டும் இல்லாமல் வேறு சில படங்களிலுமே நடித்திருக்கிறார்.

- Advertisement -

கீர்த்தி சுரேஷ் குடும்பம்:

கீர்த்தி சுரேஷின் அப்பா மலையாளத்தில் மிக பிரபலமான தயாரிப்பாளர். இவருடைய அம்மா மேகனா. இவர் பிரபலமான நடிகையாக இருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக கூட நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜாவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் தான். தற்போது பாட்டி சரோஜாவுடைய புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. கடந்த ஆண்டு இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை அடுத்து சமீபத்தில் இவருடைய நடிப்பில் சைரன் என்ற படம் வெளியாகி இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள்:

தமிழில் இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ரகு தாத்தா. இந்த படத்தை இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் இந்தி தெரியாத காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதை அடுத்து இவர் ரிவால்வர் ரீடா, கன்னிவெடி போன்ற படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தான் இவர் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

Advertisement