நடித்து எல்லோரையும் வீட்டில் பயம் காட்டி வைச்சிருக்கா – தனது சொந்த தங்கை குறித்து வனிதா

0
219
- Advertisement -

ஸ்ரீதேவி எல்லோரையும் நடித்து ஏமாற்றுவாள் என்று தன்னுடைய தங்கை குறித்து வனிதா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இதனிடையே விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் 1976ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார்- முத்துக்கனுக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா. விஜயகுமார்-மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வருகிறார். அதேபோல் இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

விஜயகுமார் குடும்பம்:

மேலும், விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள். தற்போது விஜயகுமார் தன்னுடைய குடும்பத்தையும், கேரியரையும் கவனித்து வருகிறார். மேலும், அருண் விஜய்யின் அக்கா அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார் அனிதா.

அனிதா விஜயகுமார் குறித்த தகவல்:

மேலும், கடந்த ஆண்டு அனிதா மகள் தியாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் விஜயகுமார் உடைய மகன், மகள்கள், பேரன்கள், பேத்திகள் எல்லோரும் கலந்து கொண்டு இருந்தார்கள். விஜயகுமார் குடும்பத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு விசேஷம் என்றாலும் ஒன்று கூடி வருவார்கள். இதற்காக கடந்த சில தினங்களாக மெஹந்தி பங்ஷன், சங்கீத் பங்ஷன், ஹல்தி பங்ஷன் என திருவிழா போல் விஜயகுமார் வீடு இருந்தது. நேற்று தியாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பலருமே தியாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

வனிதா பதிவு:

வழக்கம்போல் வனிதா தான் இந்த விசேஷத்தில் கலந்து கொள்ளவில்லை. வனிதா-விஜயகுமார் இடையே இருக்கும் சண்டை அனைவரும் அறிந்ததே. அதோடு தியா திருமணத்திற்கு தன்னை யாரும் அழைக்காதது குறித்து வனிதா தன்னுடைய பதிவில் சிங்கம் நடந்து வருவது போன்ற வீடியோவை பதிவிட்டு ஒட்டுமொத்த கூட்டம் ஒரு இடத்தில் சேரும்போது நீங்கள் மட்டும் தனியா இருந்தால் நீங்கள் எவ்வளவு பலம் வாய்ந்தவர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். இப்படி வனிதா தன் ஆதங்கத்தை கொட்டி வருகின்றார்.

ஸ்ரீதேவி குறித்து சொன்னது:

இந்த நிலையில் தன்னுடைய தங்கை ஸ்ரீதேவி குறித்து வனிதா பேசிய வீடியோ, நான்தான் எங்க அம்மாவிடம் அதிகமாக அடி வாங்குவேன். சின்ன வயதிலிருந்து எந்த தவறு செய்தாலும் ஸ்ரீ பாப்பா மட்டும் தப்பித்துவிடுவாள். ஏதாவது செய்து விட்டு வீட்டிற்குள் போய் கதவை பூட்டி கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வாள் . அதோட சின்னத்தம்பி படத்தில் வரும் குஷ்பூ போல வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் தூக்கிப்போட்டு உடைப்பாள். இதனால் எல்லோருமே இவளை ஏதாவது சொன்னால் அவள் ஏதாவது செய்து கொள்வாள் என்ற பயத்தில் எதுவுமே சொல்ல மாட்டார்கள். அந்த மாதிரி நடித்து எல்லோரையும் பயம் காட்டி வைத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement