இயக்குனர் மணிகண்டன் இயக்கி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்த படம் “கடைசி விவசாயி”. இந்த படம் முழுக்க முழுக்க விவசாயம் பற்றியும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் பேசப்பட்டு இருந்தது. இந்த படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் மாயாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் அவருடைய பேச்சும், நடை எல்லாமே அருமையாக இருந்தது. மேலும், படத்தில் பல பாரம்பரிய முறைகளை காண்பித்திருந்தார்கள்.
மண்பானை செய்வதில் தொடங்கி, அரிசி, திருவிழாவுக்கான இசைக்கருவிகள் என அனைத்து விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. படத்தில் இயற்கையான முறையில் விவசாயம், காலப்போக்கில் அது செயற்கை ரசாயன உரங்களாக மாறியது, ரசாயன உரங்களை ஏற்காமல் இயற்கை விவசாயத்தை பயன்படுத்துபவர்கள் என பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
நல்லாண்டி மரணம் :
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் கடைசி விவசாயி படத்திற்கு பல விருதுகளும் கிடைத்து. ஆனால் கொரோன காரணமாக படம் வெளியாக சில காலம் ஆனது. இப்படியொரு நிலையில் தான் இப்படத்தில் மாயாண்டியாக நடித்த நல்லாண்டி உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 85வயதில் காலமானார். அதற்கு பிறகுதான் “கடைசி விவசாயி” படம் வெளியானது.
நல்லாண்டி மகள் கூறியது :
இந்த நிலையில் கடைசி விவசாயி படத்தின் நாயகனான நல்லாண்டி குடும்பம் தற்போது வறுமையில் வாடி வருகிறது. உதவி செய்வதற்கு யாரும் இல்லாத நிலையில் நல்லாண்டியின் மகள் அவருடைய கணவரை 10 வருடங்களுக்கு முன்னரே இழந்து தனி ஆளாக குடும்பத்தை காப்பற்றி வந்தார். இப்படியொரு நிலையில் தான் நல்லடியின் மனைவி, மகள் மற்றும் பேத்தியிடம் பிரபல ஊடகம் ஓன்று பேட்டி எடுத்திருந்தது.
அவர்கள் கொடுத்த பேட்டியில் கூறும்போது “அப்பாவுக்கு தினமும் ஐந்நூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையில் சம்பளம் கொடுத்தார்கள். ஆனால் அந்த பணம் மருத்துவமனை செலவுக்கே சரியாக இருந்தது. படம் வெளியாவதற்கு முன்னர் படக்குழுவினர் எங்களை வந்து சந்தித்து 1 லட்சம் ரூபாய் கொடுத்து இடிகின்ற நிலைமையில் இருக்கும் இந்த வீட்டை சரி செய்து கொடுக்கிறோம் என்று கூறிவிட்டு சென்றார்கள். ஆனால் அதற்கு பிறகு எந்த தகவலும் இல்லை.
கொடுத்த 1 லட்சம் ரூபாயையும் கொரோன காலம் என்பதினால் மருத்துவ செலவுக்கும் குடும்பத்திற்கும் செலவாகி விட்டது. ஆனால் எங்களுக்கு தற்போது எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஊரில் இருப்பவர்கள் “கடைசி விவசாயி” படம் தான் இப்படி வெற்றியடைந்து விட்டதே, அப்புறம் என்ன? உங்களுக்கு லட்ச்சத்துல பணம் கொடுத்திருப்பார்கள் கஷ்டத்தில் இருக்கிறோம் என்று பொய் சொல்லாதீர்கள் என்று பேசுகின்றனர். போன் செய்தாலும் கூட யாரும் கண்டுகொள்ள வில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர் “கடைசி விவசாயி” பட நடிகர் நல்லாண்டி குடும்பம்.