2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை கடைசி விவசாயி திரைப்படம் வென்று இருக்கு நிலையில் இதையெல்லாம் பார்க்காமலேயே இந்த மண்ணை விட்டு மறைந்துவிட்டார் படத்தின் நாயகன் நல்லாண்டி. கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த விருது பட்டியலில் 2021-ஆம் ஆண்டுக்கு முன்பு தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் இடம்பெறவுள்ளன. தற்போது இந்தப் படத்துக்கு சிறந்த நடனம், சிறந்த சண்டைபயிற்சி, சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் தமிழில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்த நல்லாண்டி தாத்தாவிற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் கடைசி விவசாயி படத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பார்க்க நல்லாண்டி உயிரோடு இல்லை என்பது தான் மிகப்பெரிய சோகம்.

Advertisement

இந்த படம் வெளியான சில மாதங்கள் கழித்து நல்லாண்டி பற்றியும் நல்லாண்டி குடும்பத்தைப் பற்றியும் பிரபல சேனல் பேட்டி ஒன்றை எடுத்திருந்தது. அதில் நல்லாண்டி குடும்பத்தினர் கூறியிருப்பது, கடைசி விவசாயி படத்தை பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இவர் இப்படி நடிப்பார் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்த படத்தை பார்க்க அவர் இல்லை என்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது.

நல்லாண்டி செய்த வேலைகள்:

என் அப்பா விவசாயம் மற்றும் 100 நாள் வேலை செய்வார். இது இரண்டு மட்டும் தான் அவருக்கு தெரியும். படத்தில் காண்பித்திருப்பது போல அவர் மிகவும் அப்பாவி. அவருடைய நிஜ வாழ்க்கையை தான் படத்தில் காண்பித்திருக்கிறார்கள். என் அப்பாவிற்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது எப்படி என்றால், ஒரு நாள் அவர் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கடைசி விவசாயி படக்குழுவினர் படத்தில் நடிப்பதற்காக ஆட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தான் என் அப்பாவை அவர்களுக்கு தெரிந்தது. அதற்கு பிறகு என் அப்பாவிடம் படத்தில் நடிப்பது குறித்து பேசினார்கள்.

Advertisement

நல்லாண்டி படத்தில் நடித்த அனுபவம்:

அவரும் சரி என்று சம்மதித்தார். அதற்கு பிறகு தான் கடைசி விவசாயி படத்தில் என் அப்பா நடித்தார். அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் படக்குழுவினர் என்னை நன்றாக கவனித்தார்கள். என்னுடைய தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்து வைத்திருக்கிறார்கள் என்று பெருமையாக சொல்வார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் தன் மகனைப் போலவே நினைத்து பார்த்து சந்தோஷப்படுவார். ஆனால், அவர் இந்த தருணத்தில் இல்லாமல் இருப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. படம் முடிந்த பிறகு படத்தை போட்டுக் காண்பித்தார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர் இப்படி எல்லாம் நடிப்பாரா? என்று கூட எங்களுக்கு தெரியாது.

Advertisement

நல்லாண்டியின் கடைசி நிமிடம்:

படத்தில் அவர் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லணும். பின் படம் எப்போது வரும் என்று கேட்டோம். இன்னும் கொஞ்ச நாளில் வந்துவிடும் என்றார்கள் அந்த சமயத்தில்தான் கொரோனா வந்ததால் படம் தள்ளிப்போனது. பிறகு அப்பாவும் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவர் இறந்ததற்கு பிறகு தான் இந்த படம் வந்தது. அவர் இல்லை என்றாலும் இந்த படத்தின் மூலம் அவர் எல்லோரிடமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்தால் பெருமையாக இருக்கிறது. படத்தை பார்த்து எல்லோரும் அப்பாவைப் பற்றி விசாரித்தார்கள். நல்லாண்டி உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போதும், இறந்து போன போதும் படக்குழுவினர்கள் அனைவரும் வந்திருந்தார்கள் என்று நல்லாண்டி குடும்பத்தார் கூறி இருந்தனர்.

Advertisement