கைவிட்ட சினிமா, கோவிலில் பிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்.. நெஞ்சை உலுக்கும் புகைப்படம்..

0
211331
pallu-balu
- Advertisement -

சினிமாவைப்பொறுத்தவரை இருந்தால் ராஜா இல்லையேல் ரோஜா என்ற நிலைமைதான் பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு நேர்ந்துள்ளது. அதிலும் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் என்றால் அவர்களின் சினிமா வாழ்விற்கு ஒரு உத்தரவாதம் இல்லை என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான் அந்தவகையில் வரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான காதல் படத்தில் நடித்த பல்லு பாலு என்ற நடிகர் தற்போது எங்கு இருக்கிறார் என்னவானார் என்ற நிலையை அறிந்தால் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காதல் படத்தில் நீங்க ஏன் ஹீரோ நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க, அமெரிக்கா மாப்பிள்ளை, அண்ணன், தம்பி, நண்பன் அப்படி ஏன் நீங்க பண்ணக்கூடாது என்று உதவி இயக்குனர் கேட்கும் கேள்விக்கு அந்த இளைஞர், ‘நடிச்சா ஹீரோதான். நான் வெயிட் பண்ணுறேன். அப்புறம் கொஞ்சம் அரசியல், சி.எம்., அப்புறம் டெல்லி, அதுபோதும்’ என்று வசனம் பேசி அசத்தியிருப்பார்.

-விளம்பரம்-

இந்த காமெடியை பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக சிரிக்காமல் இருக்கவே முடியாது. காதல் படத்தில் விருச்சககாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பல்லு பாலுவின் கதை மிகவும் அவலானது. காதல் படத்திற்குப் பிறகு பல்லு பாலுவிற்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. காதல் படத்திற்கு பின்னர் வேட்டைக்காரன் படத்தில் ஒரு காட்சியில் ‘அந்த பெண்ணை நான் கட்டக்கொள்கிறேன்’ என்று இவர் பேசியதும் . அந்த கொசுவை அடிங்கடா என்று விஜய் சொல்வார். அந்த படத்தில் தான் பல்லு பாலுவை கடைசியாக நாம் தெளிவாக பார்த்தது போல ஒரு ஞாபகம்.

- Advertisement -

அதன் பின்னர் தூங்கா நகரம் உள்ளிட்ட 10 படங்கள் நடித்துள்ள பல்லு பாலு, அதன் பின்னர் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் பல கம்பெனிகளில் பட வாய்ப்பிற்காக ஏறி இறங்கி அலைந்துள்ளார். காதல் படத்தில் நடித்தால் ஹீரோ தான் என்று சொன்னாலும் அதன் பின்னர் சினிமாவில் எதாவது வாய்ப்பு கிடைத்து விடாதா என்று ஏங்கி மிகவும் கடினமாக முயற்சி செய்துள்ளார் பாலு. இருந்தும் ஒரு படத்தில் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் சுற்றித் திருந்துள்ளார். இந்நிலையில், பல்லு பாலு, ஒரு கோவில் வாசலில் பிச்சை எடுத்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக செய்தி பரவி வருகிறது.

Image result for நடிகர் பல்லு பாலு

‘காதல்’ படத்திற்கு பிறகு அவர் எந்த சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு தேடிப் போகவில்லை என்றும், அவருடைய அப்பாவும் அம்மாவும் இறந்தபிறகு வேறு வழியின்றி பிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பாலுவின் அம்மா, மற்றும் அப்பா இருவரும் புற்று நோய் பாதிக்கப்பட்டு இறந்து போக கேட்பாரற்று அனாதையாக சென்னை சூழையின் அருகில் உள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வருந்திருக்கிறார். அன்றாடம் சாப்பிட இரண்டு இட்லீ கூட இல்லாமல் கோவில்லு வரும் அனைவரிடமும் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார் பாலு. இதனை அறிந்த ஒருபத்திரிகையாளர்கள், அவரை கண்டுபிடித்து பேட்டி எடுக்க சென்ற அவரிடம் மனநலம் பாதிக்கப்பட்டது போல் பேசியுள்ளார். மிகந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார் பாலு.

-விளம்பரம்-

அந்த பேட்டியின் மூலம் அவரது நிலையை அறிந்த பிரபல வில்லன் நடிகர் தீனா, மற்றும் பிரபல இயக்குனர் ஒரு வரும் சேர்ந்து அவரை தேடியுள்ளனர். பின்னர் சூலையில் ஒரு கோவிலில் பிச்சனை எடுத்து வந்ததைப் பார்த்து மனம் உடைந்து போன தீனா அவரை அழைத்து வந்து தங்கவைத்து தற்போது பாதுகாத்து வருகிறார். மேலும், அவருக்கான பட வாய்ப்புகள் தருமாறும் தனது திரையுளக நண்பர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். இருப்பினும் பாலுவிற்கு சரியான உதவிகள் கிடைக்காமல் இன்னமும் ஆதரவின்றி சுற்றித்திருந்து தான் வருகிறாராம்.

Advertisement