விஜய் ஆண்டனி படத்தில் காதல் ஓவியம் பட ஹீரோ கண்ணன் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் இசையில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ ‘ஹிட்லர்’ போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ககன மார்கன். இந்த படத்தினுடைய வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து அக்னி சிறகுகள் என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். ஆனால், இந்த படத்தினுடைய வேலைகள் தாமதம் ஆகிக்கொண்டிருக்கிறது.
சக்தி திருமுருகன் படம்:
தற்போது விஜய் ஆண்டனியின் 25வது படத்திற்கு சக்தி திருமுருகன் என்று பெயர் இடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே நடித்தும் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை அருண் பிரபு இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே அருவி, வாழ் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் காதல் ஓவியம் பட ஹீரோ கண்ணன் நடிக்கிறார் என்ற தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதல் ஓவியம் கண்ணன்:
இயக்கத்தின் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த படம் காதல் ஓவியம். இந்த படம் உணர்ச்சி பூர்வமான காதல் கதைகளத்தை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் ராதா, கண்ணன், கவுண்டமணி, ஜனகராஜ், ராதாரவி, மணிவண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக கண்ணன் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு அனைவரும் மதியிலும் பாராட்ட பெற்றிருந்தது.
கண்ணன் ரீ என்ட்ரி:
இந்த படத்திற்கு பின் அவரை எந்த படத்திலும் காண முடியவில்லை. இப்படி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் இவர் சினிமா பக்கமே வராமல் இருந்தார். தற்போது இவர் விஜய் ஆண்டனி நடிக்கும் சக்தி திருமுருகன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இவருடைய ரீ என்ட்ரி படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது என்றும் படக்குழு தெரிவித்திருக்கிறார்கள். மேலும், குடும்ப உறவுகள், அதிரடி சண்டை காட்சிகள், எமோஷனல் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது.
படம் குறித்த தகவல்:
அதுமட்டுமில்லாமல் இந்த படம் விஜய் ஆண்டனியின் சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான படமாக அமையும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் க்ரிப்லானி, செல் முருகன், திருப்தி ரவீந்திர, கிரண், ரியா, சோபா விஸ்வநாத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் வேலைகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த படத்திற்கு தமிழில் சக்தி திருமுருகன் என்றும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளில் பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் சமீபத்தில் சோசியல் மீடியாவில் சர்ச்சையும் ஆனது.