மருந்து வாங்க கூட காசு இல்ல யோகி பாபு பேச்சை கேட்டு அந்த கோவிலுக்கு போனேன். அந்த காயம் அப்படியே மறைந்து போனது – காதல் சரண்யா ஷேரிங்.

0
754
- Advertisement -

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த படம் காதல். இந்த படத்தை சங்கர் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பரத், சந்தியா, சுகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் காதல் சரண்யா. இவருடைய உண்மையான பெயர் சரண்யா நாக். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

-விளம்பரம்-

இவர் 1998ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், இவர் காதல் படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார். காதல் திரைப்படத்திற்கு பின்னர் இவர் துள்ளுற வயசு என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் ஒரு வார்த்தை பேசு என்ற படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருந்தார்.

- Advertisement -

ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் தெலுங்கில் இவர் 10th கிளாஸ் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் மீண்டும் தமிழில் நடிக்க துவங்கிய சரண்யா 2009ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். இருந்தாலும், இவருக்கு கதாநாயகி வாய்ப்பு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.

இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இறுதியாக இவர் 2015 ஆம் ஆண்டு ஈர வெயில் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இடையில் இவர் ஒரு சில குறும் படங்களில் கூட நடித்திருந்தார். அதற்கு பின் இவர் எங்கு இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகாமல் தான் இருந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் காதல் சரண்யா அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதில் அவர் ஆன்மீகம் குறித்து கூறியிருப்பது, எனக்கு எப்போதுமே திருத்தணி முருகன் ரொம்ப ஸ்பெஷல். சில ஆண்டுகளுக்கு முன்னாடி என்னுடைய கையில் அலர்ஜி காரணமாக பெரிய காயம் வந்தது. என் நண்பர்கள் எல்லோருக்குமே அந்த விஷயம் தெரியும். அது ஒரு வகையான தோல் நோய் என்று சொன்னார்கள். இதனால் 2018 ஆம் ஆண்டிலிருந்து 2019 வரை அதற்காக நான் பல சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அந்த அலர்ஜி பரவல் கை மூட்டு வரை பரவி விட்டது. இதனால் சினிமா வாய்ப்புகள் தவறி விடுமோ என்று பயந்தேன்.

பின் மருத்துவர்கள் இந்த காயம் உங்களுடைய உடல் முழுவதுமே வரும் என்று சொல்லியிருந்தார்கள். இதை என் நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் என்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்றெல்லாம் பயந்து இருந்தேன். அப்போதுதான் யோகி பாபு அவர்கள் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அவர், எல்லா நல்ல விஷயத்துக்கும் நான் திருத்தணிக்கு போவேன் என்று சொல்லியிருந்தார். அதை பார்த்து தான் நானும் திருத்தணி போயிட்டு வரலாம் என்று திருத்தணிக்கு போனேன். அங்கு உப்பும், மிளகும் வாங்கி என் உடம்பு முழுக்க சுத்தி போட்டுவிட்டு கால், கை கழுவி விட்டு சாமியை கும்பிட்டு வந்தேன்.

அப்ப மருந்து வாங்க கூட என்னிடம் காசு இல்லை. பின் 20 நாளில் என் உடம்பில் அரிப்பே எதுவுமே இல்லை. ஒன்றரை மாதத்தில் என் கையில் இருந்த அந்த காயம் மறைந்து விட்டது. வெறும் பத்து ரூபாய் உப்பு, மிளகு என் வாழ்க்கையில் மிகப்பெரிய அற்புதம் செய்யும் என்று நான் நினைக்கவே இல்லை. இது எல்லாம் திருத்தணி முருகனின் திருவிளையாடல் தான் என்று சரண்யா தன்னுடைய பூஜை அறையில் இருக்கும் பல்வேறு தெய்வங்கள் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறி இருக்கிறார்.

Advertisement