இயக்குநர் SP ஜனநாதன் அவர்களுக்கு நேற்றைய தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் அவர் காலமாகிவிட்டதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது. இந்த செய்தி வெளியான ஒரு சில மணி நேரத்தில் இயக்குனர் அமீர், கருபழனியப்பன் என்று பலரும் ஜனநாதனின் உடல் நிலை குறித்து சமூக வலைதளத்தில் தெரிவித்தனர். மேலும்,அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்கள்.
https://twitter.com/karupalaniappan/status/1370305125181386755
இப்படி ஒரு நிலையில் அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் காதல் படத்தில் நடித்த நடிகை சரண்யா, என்ன நடந்தது ? தற்போது அவர் எப்படி இருக்கிறார் என்பதை கூறி இருக்கிறார். நேற்று மதியம் அவரது வீட்டில் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரத்தில் அசிஸ்டண்ட் இயக்குனர் ஒருவருக்கு போன் செய்து மயக்கம் வருகிற மாதிரி இருக்கு கொஞ்சம் வந்து பாத்துட்டு போ என்று சொல்லியிருக்கிறார் அனைவரும் வேறு வேலையில் பிஸியாக இருந்ததால் அப்போது அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை.
அவரை நேரில் சென்று பார்ப்பதற்கு வாந்தி எடுத்துவிட்டு நினைவிழந்து மயங்கி இருந்தார் உடனே அருகில் இருந்த பேமிலி டாக்டரிடம் அழைத்து சென்றார்கள் அவர் பார்த்துவிட்டு உடனே அப்பாவிற்கு கூட்டிச் செல்லும்படி சொல்லி இருக்கிறார் நானும் அவருடன் இங்கேதான் இருக்கிறேன் அவருக்கு காலையிலிருந்தே அதிகபட்சமாக என்ன சிகிச்சை கொடுக்க முடியுமோ அதை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்னைக்கு காலை எல்லாம் போய் தட்டி எழுப்பிப் பாத்தேன். ஆனா அவரு ரெஸ்பான்ஸ் பண்ணவே இல்ல.

நேத்து நைட்டு 12 மணிக்கு விஜய் சேதுபதி ஷூட்டிங் முடிச்சு வந்து பார்த்துட்டுப் போனாரு.அவரும் எவ்வளவோ தட்டி எழுப்பிப் பார்த்தாரு. பக்கத்துல இருந்தவங்க கூட ஏன் இவ்ளோ வேகமா தட்டுறீங்கன்னு கேட்டாங்க. சேதுபதிக்கு கோபம் வந்திருச்சு. `அவரு என் டைரக்டரு. நான் தட்டுனா அவருக்கு என் குரல் கேக்கும். அவரு எழுந்திருச்சிருவாரு'ன்னு சொன்னாரு. டைரக்டர் கண்ணு முழிச்சு பார்க்கவேயில்லை. `அவ்ளோதான் லைஃப்... அவ்ளோதான் லைஃப்'னு விஜய் சேதுபதி அழுதுட்டே போனாரு. அவருக்கு யாரு ஆறுதல் சொல்றது? என்று வருத்தத்தோடு கூறியுள்ளார் சரண்யா.





