மொட்டை அடித்து, அலகு குத்தியது ஏன்? அப்படி என்ன வேண்டுதல்? காதல் சரண்யா சொன்ன காரணம்

0
270
- Advertisement -

திருத்தணி முருகர் கோயிலில் மொட்டையடித்து அழகு குத்தியது தொடர்பாக காதல் சரண்யா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் கடந்த 2004ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்த நடிகை தான் சரண்யா நாக். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 1998ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘காதல் கவிதை” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் ஒரு சில படங்களில் நடித்து இருந்தார். இருந்தாலும், இவர் காதல் படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார். காதல் திரைப்படத்திற்கு பின்னர் இவர் ‘துள்ளுற வயசு’ என்ற படத்தில் நடித்திருந்தார். பின் இவர் ‘ஒரு வார்த்தை பேசு’ என்ற படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் தெலுங்கில் இவர் ’10th கிளாஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றிபெறவில்லை.

- Advertisement -

சரண்யா நாக் திரைப்பயணம்:

அதன் பின்னர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார் சரண்யா. அந்த வகையில் 2009ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பேராண்மை’ படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக சரண்யா நடித்திருந்தார். அதன்பின்னரும் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இறுதியாக இவர் 2015 ஆம் ஆண்டு ‘ஈர வெயில்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை.

சினிமாவில் விலகிய சரண்யா:

அதற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய சரண்யா நாக் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘லாபம்’ படத்தில் பணியாற்றியிருந்தார். அதோடு இடையில் இவர் உடல் எடை அதிகரித்து இருந்ததால் பட வாய்ப்புகள் அமையவில்லை. சமீப காலமாக இவர் கோவில், பூஜை வழிபாடு என்று இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் திருத்தணி முருகன் கோவிலில் மொட்டை அடித்து, அழகு குத்தி இருக்கிறார். இது தொடர்பான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். இது குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

-விளம்பரம்-

சரண்யா பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியில் சரண்யா, நான் 2019 ஆம் ஆண்டிலிருந்து திருத்தணி கோயிலுக்கு போகிறேன். ஒருமுறை நடிகர் யோகி பாபு, படம் இல்லாமல் வாழ்க்கையில் அடுத்து என்ன பண்ணுவதுன்னு தெரியாமல் இருந்தபோது திருத்தணி முருகன் கோயிலில் படுத்திருந்தேன். அப்போதுதான் யாமிருக்க பயமேன் பட வாய்ப்பு கிடைத்தது. அப்ப எனக்கு அந்த சின்ன வாய்ப்பாக தெரிந்தது. ஆனால், அந்த படத்துக்கு பிறகு என்னுடைய கேரியரையே மாறிவிட்டது என்று சொல்லியிருந்தார். ஒரு சினிமாக்காரர் உடைய வாழ்க்கை அந்த கோயிலுக்கு போன பிறகுதான் மாறி இருக்கு.

திருத்தணி கோவில் குறித்து சொன்னது:

நம்முடைய வாழ்க்கையிலும் ஏதாவது மாற்றம் நிகழும் என்று தான் திருத்தணிக்கு 75 ரூபாயில் பஸ்ஸில் டிக்கெட் எடுத்து முருகரை தரிசனம் பண்ணிட்டு வந்தேன். உடனே என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்ததா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால், அவரை நான் வழிபட வழிபட என்னுடைய வாழ்க்கையில் நடந்த மாற்றங்களை என்னால் உணர முடிந்தது. என்னுடைய குரு பரஞ்சோதி பாபா. அவருடைய வழிகாட்டுதல் இருந்ததால் எனக்கு திருத்தணி முருகர் அறிமுகம் ஆனார். காலங்காலமாக நிறைய வழிப்பாட்டு முறைகள் இருக்கிறது. கோயிலில் முடி கொடுக்கிறதை அவர்கள் நல்ல விஷயத்துக்கு தான் பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றியது. கடவுள் சொன்னாரா என்று கேட்டா, அவர் அன்பைத் தவிர எதையும் கேட்கவில்லை. அவர் எனக்கு நிறைய விஷயங்கள் செய்கிறார்.

முருகர் காணிக்கை செய்த விதம்:

எனக்கு உன்னைத் தவிர எதுவும் வேண்டாம். நீ என் கூடவே இரு என்று எல்லா சூழ்நிலையிலும் வேண்டிக் கொண்டு என் முருகனுக்காக நான் பண்ணினேன். குருக்கள் சொன்ன வழிமுறைகளை பின்பற்றி 11 நாள் விரதம் இருக்க முடிவெடுத்தேன். ஆனால், 29 நாட்கள் நீண்டது. திருத்தணி கோவிலில் அங்கேயே குளித்து எழுந்து மொட்டை போட்டு அழகு குத்தி இருந்தேன். அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர யோசித்தேன். அதற்குப் பிறகுதான் போட்டேன். சில விமர்சனங்கள் வந்தாலும் நிறைய பாசிட்டிவ் வந்தது. நம்முடைய வாழ்க்கையில் எதுவும் நிலை இல்லை. அழகும் நிலையானது கிடையாது. பெண்கள் பல விஷயங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கு. எல்லாத்தையும் எதிர்கொண்டு கடந்து வந்து விடலாம் என்ற நம்பிக்கை இது எனக்கு கொடுத்திருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Advertisement