அவர் நடிச்சா நான் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டார் – விவேக், வடிவேலு செய்த செயல் குறித்து வேதனைபட்ட காதல் சுகுமார்.

0
3030
- Advertisement -

நடிகர் வடிவேலும் விவேக்கும் என்னை வாழவே விடவில்லை என்று காமெடி நடிகர் சுகுமார் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் சுகுமாரும் ஒருவர். இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான “காதல்” படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் பரத், சந்தியா நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தின் மூலம் நடிகர் சுகுமார் மக்களிடையே பிரபலமானார். அதுமட்டும் இல்லாமல் காதல் படத்திற்கு முன்பாகவே இவர் கமலுடன் விருமாண்டி என்ற படத்தில் நடித்து இருந்தார். இவர் முதன்முதலாக 1997ம் ஆண்டு ‘சக்தி’ என்ற படத்தில் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அறை எண் 305ல் கடவுள், விசிடி, என் ஆளோட செருப்ப காணோம்’ போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

சுகுமார் திரைப்பயணம்:

இதை தொடர்ந்து நடிகர் சுகுமார் அவர்கள் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளி வந்த ‘மனுஷனா நீ’ என்ற படத்தில் நடித்து இருந்தார். சில படங்களில் நடித்து இருந்தார். இவர் சினிமா உலகில் நடிகர் மட்டும் இல்லாமல் சில படங்களை இயக்கிய இயக்குனர் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு ‘திருட்டு விசிடி’ என்ற படத்தை இயக்கி இருந்தார். பின் 2016 ஆம் ஆண்டு “சும்மா ஆடுவோம்” என்று கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை படமாக இயக்கி இருந்தார்.

சுகுமார் அளித்த பேட்டி:

இருந்தாலும் இவரின் படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் சுகுமார் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து கூறியிருந்தது, கமலஹாசன் நடித்த விருமாண்டி படத்தில் டைவ் அடிக்க ஆட்கள் வேண்டும் என்று என்னை அழைத்திருந்தார்கள். நான் டைவ் அடித்து காண்பித்தேன். அதை பார்த்து கமல் சார் என்னிடம் வந்து ஜிம்னாஸ்டிக் தெரியும் என்று காட்டிக்கொள்ளாதீர்கள்.

-விளம்பரம்-

சினிமா குறித்து சொன்னது:

அதற்குப் பிறகு எல்லா படத்திலும் டைவ் அடிக்க கூப்பிடுவார்கள் என்று சொன்னார். அதனால் நான் நிறுத்திக் கொண்டேன். அது மட்டும் இல்லாமல் வடிவேலு போல நான் மிமிக்ரி செய்வேன். அதனால் சின்னத்திரை வடிவேலு என்று என்னை அழைப்பார்கள். பிறகு நல்ல நடிகர் மற்றவர்களை போல் மிமிக்ரி செய்து காட்டக் கூடாது என்றதால் அதனையும் நிறுத்திக் கொண்டேன். சினிமாவில் ஒரு பக்கம் வடிவேலு டீம், ஒரு பக்கம் விவேக் டீம் என இரண்டு இருந்தது.

வடிவேலு-விவேக் குறித்து சொன்னது:

என்னால் இந்த பக்கமும், அந்த பக்கமும் போக முடியவில்லை. அதோடு நான் பல படங்களில் கமிட் ஆகி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரை போய்விட்டு திரும்பி வந்திருக்கிறேன். அவர்கள் இரண்டு பேரும் என்னை வாழவே விடவில்லை. நடிகர்களும் சில நேரம் அரசியல்வாதி போல நடந்து கொள்வார்கள். சினிமாவில் ஆண்களுக்கு இந்த நிலைமை என்றால் பெண்கள் நிலைமை ரொம்ப மோசம். எல்லாத்துக்கும் சம்மதிக்க வேண்டும் இல்லையென்றால் வீட்டில் தான் உட்கார வேண்டும். சினிமாவிலும் நிறைய அரசியல் நடக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement