தமிழில் சங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா நடிப்பில் வெளியான காதலன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் கன்னட நடிகர் கிரிஷ் கர்னாட். காதலன் படத்தில் நக்மாவின் தந்தையாக நடித்திருந்தார் ஆனால், இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமானது சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘நான் அடிமை இல்லை’ என்ற படம் மூலம் தான்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இவர், திரைப்படத் துறையில் இயக்குநராக பணியாற்றியவர். தமிழில் ‘ரட்சகன்’, ‘செல்லமே’, ‘ஹேராம்’, “காதலன்” உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். 10 தேசிய விருதுகளை வென்றவர். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், சங்கீத நாடக அகாடமி உள்ளிட்ட விருதுகளையும் வாங்கியிருக்கிறார். கிரிஷ் கர்னாட்டின் ‘ராக்ட் கல்யாண்ட்’ சிறந்த நாடகமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது
கர்னாட் நாற்பது ஆண்டுகளாக நாடகங்களை இயக்கி வருகிறார்.இவருக்கு கன்னடத்திற்கான ஞானபீட விருது வழங்கப்பட்ட்து. இந்த விருதானது இந்தியாவில் இலக்கியம் சார்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கெளரவமாகும். மேலும் இவர் இயக்கிய கன்னட நாடகம் ஒன்று 7 மொழிகளில் அரங்கேற்ற பட்டது.
பல ஆண்டுகளாக ஒரு நடிகராக, இயக்குனராக மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் நிலைத்துநின்றார் கிரிஷ். இதனால் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு இந்திய அரசாங்கத்தின் மூலமாக பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற கெளரவங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நீண்ட வருடங்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவர் இன்று (ஜூன் 10) காலை காலமாகியுள்ளார், இவருக்கு வயது 81. கிரிஷ் கர்னாட்டின் மறைவு, இலக்கிய உலகத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என நடிகர் நாசர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் கர்னாட்டின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்