Home பொழுதுபோக்கு சமீபத்திய

கடைசி வரை நீங்காத மர்மம் – காதலர் தின குணாலின் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா ? இதோ புகைப்படம்.

0
725
kunal
-விளம்பரம்-

தமிழ் சினிமா திரை உலகில் “காதலர் தினம்” படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் குணால். இவர் மும்பையைச் சேர்ந்தவர். தன்னுடைய கல்லூரிப் படிப்பை மும்பையிலேயே முடித்தார். பின் இவர் மாடலிங் செய்து வந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. நடிகர் குணால் ஹிந்தியில் ‘தில் ஹை தில் மெய்ன்’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின் தமிழ் மொழி படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், புன்னகை தேசம், அற்புதம், பேசாத கண்ணும் பேசுமே, திருடிய இதயத்தை, உணர்ச்சிகள், நிலவினிலே போன்ற பல தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Kadhalar Dhinam Actor Kunal Wife

பின் கடைசியாக குணால் நடித்த படம் ‘நண்பனின் காதலி’ படம் தான். இப்படி சினிமா உலகில் உயரத்தில் சென்று கொண்டு இருந்த நடிகர் குணால் வாழ்வில் என்ன தான் நடந்தது? என்று தெரியவில்லை. இன்னும் குணால் பற்றிய பல கேள்விகள் இணையங்களில் எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். மேலும், நடிகர் குணால் அவர்கள் 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணம் குறித்து இன்னும் புதிராகவே உள்ளது. இதனைத் தொடர்ந்து இவரைப்போலவே சிம்ரனின் தங்கை மோனலும் தற்கொலை செய்து கொண்டார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

குணாலின் திருமணம் – காதல்:

ஆனால், ஏற்கனவே குணால் அவர்கள் மும்பையை சேர்ந்த அனுராதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை, பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. பின் திடீரென ஒருநாள் அனுராதா குணால் இடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதனை தொடர்ந்து குணால் மனம் நொந்து போயிருந்தார். இந்த நிலையில் மும்பையிலுள்ள ஓஷிவாரா என்ற பகுதியில் நடிகை லவீனா உடன் குணால் வசித்து வந்தார். மேலும், திருமணம் செய்வதற்காக இருவரும் நிச்சயம் செய்து கொண்டார்கள். நடிகை லவீனா அப்போது தான் சினிமா துறையில் நடிக்க ஆரம்பித்த புதுமுக நடிகை ஆவார்.

Image result for actor kunal family

குணாலின் தற்கொலை:

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் குணால் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணங்கள் தற்போது வரை மர்மமாகவே உள்ளன. மேலும், மருத்துவர்கள் அவர் உடலைப் பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். இதன் மூலம் குணால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்தார்கள். பின் குணால் தற்கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் கூறியது, காதல் பிரச்சினையால் தான் தற்கொலை செய்தார் என்று சொல்லி நடிகை லவினாவை கைது செய்து விசாரித்து வந்தார்கள் போலீசார். பின்னர், அவரை விடுவித்தும் விட்டார்கள். மேலும், திருமணத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதாலும், தனக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வராத இருந்த காரணத்தினாலும் குணால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார்கள்.

-விளம்பரம்-

குணாலின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தவர்கள்:

இதனைத்தொடர்ந்து குணால் தற்கொலை பற்றி நெருங்கிய நண்பர்கள் கூறியது, காதலர் தினம் படத்திற்கு பிறகு சினிமாவில் பெரிய அளவு வரவேற்கப்படவில்லை என்றும், அதிக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்கள். அதோடு சில மாதங்களாகவே குணால் மன அழுத்தத்தில் இருந்தார். ஆனால்,குணால் நடிகர் மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். ஆனால், அவருடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறி இருந்தார்கள். மேலும், குணால் மரணத்திற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், இயக்குனர், தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி ஆகியோர் அனைவரும் வந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

குணால் மனைவி செய்த வேலை:

ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். குணால் மரணம் குறித்து பல மர்மங்கள் மறைந்து இருக்கிறது என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் நடிகர் குணால் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் கிடைக்க பெற்றது. இந்த நிலையில் குணால் மனைவி குறித்து தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுஎன்னவென்றால், குணால் செய்து இருந்து நஷ்டமடைந்த தொழிலை குணாவின் மனைவி கையில் எடுத்து நடத்தி வருகின்றாராம். தற்போது அந்த தொழில் நன்முறையில் சென்று கொண்டு இருக்கிறது. இப்போது குணாலின் மனைவி குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news